ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக்.. யாத்ரா 2 ஓடிடியில் வெளியானது!
சென்னை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையைத் தழுவி உருவான யாத்ரா 2 படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி, ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்திய சினிமாவில் பயோபிக் திரைப்படங்கள் எடுக்கப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இளையராஜாவின் பயோபிக் இளையராஜா என்றே பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை சாணிக்காயிதம், ராக்கி, கேப்டன் மில்லர் திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார்.

யாத்ரா: ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி யாத்ரா என்ற படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. மஹி ராகவ் இயக்கிய இப்படத்தில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிகர் மம்மூட்டி நடித்திருந்தார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது.
யாத்ரா 2: இப்படத்தின் அடுத்த பாகமான 'யாத்ரா 2' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தையும் முதல் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவே இயக்கியிருக்கிறார். இரண்டாம் பாகத்தை பொறுத்தவரை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடித்துள்ளார்.
ஓடிடியில்: முதல் பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த மம்மூட்டி இந்த பாகத்திலும் இடம்பெற்றுள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதலமைச்சரானது வரை நடந்த நடந்த சம்பவங்கள் இரண்டாம் பாதியில் இடம் பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகிய இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வெற்றியை குவித்த நிலையில், தற்போது யாத்ரா 2 திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. இப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஜாலியாக வீட்டில் இருந்தே பார்த்து மகிழலாம்.


Click it and Unblock the Notifications











