Bramayugam OTT: ஓடிடியில் வெளியானது மம்மூட்டியின் ‘பிரமயுகம்’.. எந்த பிளாட்ஃபார்மில் பார்க்கலாம்?
சென்னை: மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி தியேட்டர்களில் வெளியான பிரமயுகம் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ள நிலையில், அதிரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடிடி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமயுகம் ஓடிடியில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரமயுகம்: மாந்தீரிகம் நிறைய தெரிந்த கொடுமன் போட்டியாக மம்மூட்டி பிரம்மயுகம் படத்தில் நடித்துள்ளார். பூதகாலம் படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இந்த படத்தை இயக்கி உள்ளார். மம்மூட்டியுடன் சேர்ந்து மொத்தம் 5 நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன் அசோகன், சித்தார்த், மணிகண்ட ராஜன் மற்றும் யட்சியாக அமல்டா லிஸ் எனும் ஒரே ஒரு நடிகை மட்டுமே நடித்துள்ளார்.
பயங்கர விஷுவல்ஸ்: மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 9ம் தேதிவெளியான பிரேமலு திரைப்படம் காதலை மையமாக வைத்து 110 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இன்று அந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் 175 கோடி வசூலை ஈட்டி மலையாள சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியிருக்கிறது. பயங்கர விஷுவல்ஸ் உடன் வெளியான மம்மூட்டியின் பிரமயுகம் 85 கோடி வசூல் ஈட்டிய நிலையில் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

ஓடிடி ரிலீஸ்: 4 வார காலத்தில் தென்னிந்திய படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், மம்மூட்டியின் பிரமயுகம் திரைப்படம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மார்ச் 15ம் தேதி சரியாக ஒரு மாத காலத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. பிரேமலு மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படங்கள் இன்னமும் ஓடிடி ரிலீஸை அறிவிக்கவில்லை. பிரேமலு இந்த மாத இறுதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோனி லைவ்: அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் பிரமயுகம் வெளியாகவில்லை. மம்மூட்டியின் இந்த படத்தை சோனி லைவ் அதிக தொகை கொடுத்து போட்டிப் போட்டு வாங்கியிருக்கும் நிலையில், இன்று முதல் சோனி லைவ்வில் மம்மூட்டியின் பேயாட்டத்தை ரசிகர்கள் கண்டு ரசிக்க தயாராகி விட்டனர்.
மம்மூட்டி கைவசம்: மம்மூட்டி அடுத்ததாக காடுகன்னவா ஒரு யாத்ரா, பஸுக்கா, டர்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒவ்வொரு வருஷமும் 4 முதல் 5 படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்து மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸையும் மார்க்கெட்டையும் அதிகரித்து வருவதில் அதிக பங்கு மம்மூட்டிக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.


Click it and Unblock the Notifications











