OTT: பிரமயுகம் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?.. மம்மூட்டியின் மிரட்டலை வீட்டிலேயே பார்க்க ரெடியா?
சென்னை: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான பிரமயுகம் திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூலை ஈட்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய படங்கள் 4 வார காலத்திற்குள் ஓடிடியில் வெளியாகி வரும் சூழல் நிலவி வருவதால், விரைவிலேயே பிரமயுகம் படமும் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.
மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. மம்மூட்டி படங்களை மொழிகளை கடந்து கண்டு ரசிக்கும் ரசிகர்கள் அதன் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கான சூப்பர் நியூஸ் வெளியாகி இருக்கிறது.

பிரமயுகம்: கொடுமன் போட்டியாக பிரம்மயுகம் படத்தில் மம்மூட்டி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பூதகாலம் படத்தை இயக்கிய இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மம்மூட்டியுடன் சேர்ந்து ஒட்டுமொத்தமாகவே 5 நடிகர்கள் தான் நடித்துள்ளனர். அர்ஜுன் அசோகன், சித்தார்த், மணிகண்ட ராஜன் மற்றும் யட்சியாக அமல்டா லிஸ் எனும் ஒரே ஒரு நடிகை மட்டுமே நடித்துள்ளார். ஆடையில்லாமல் நடித்துள்ள அவர் ஒரு 2 சீன்களும் செம வொர்த்தான சீன்.
ஹாரர் மிரட்டல்: கடந்த பிப்ரவரி 9ம் தேதி மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் காதலை மையமாக வைத்து கல்லா கட்டியது. அதன் பின்னர் ஹாரர் படமாக வெளியான பிரமயுகம் படமும் அதிரடியாக 50 கோடி வசூலை கடந்து 75 கோடி வரை ஈட்டியுள்ளது. பிரமயுகம் படத்துக்கு பின்னர் 22ம் தேதி வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என ரசிகர்கள் 3 படங்களையும் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர்.
ஓடிடி ரிலீஸ்: 4 வார காலத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான பிரமயுகம் திரைப்படம் மார்ச் 15ம் தேதி சரியாக ஒரு மாத காலத்தில் ஓடிடிக்கு ஓடி வருகிறது. பிரேமலு திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ஓடிடி தளத்தில்: அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்தில் பிரமயுகம் வெளியாகவில்லை. மம்மூட்டியின் இந்த படத்தை சோனி லைவ் பல கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கி விட்டது. பிரமயுகம் படத்தை சோனி லைவ் சந்தாதாரர்கள் வரும் மார்ச் 15ம் தேதி முதல் வீட்டிலேயே கண்டு ரசிக்கலாம்.
அடுத்தடுத்த படங்கள்: மம்மூட்டி அடுத்ததாக பஸுக்கா, டர்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். காடுகன்னவா ஒரு யாத்ரா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், அந்த படம் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் கைவசமும் பல படங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதன் காரணமாகவே தக் லைஃப் படத்தில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











