ஓடிடியில் வெளியாகும் மம்முட்டியின் சிபிஐ தி ப்ரெய்ன்.. ரசிகர்கள் கொண்டாட இந்த ஒரு காரணம் போதாதா?
திருவனந்தபுரம் : நடிகர் மம்முட்டியின் நடிப்பில் கே மது இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது சிபிஐ தி ப்ரெய்ன் படம்.
இந்தப் படத்தில் சேதுராம ஐயர் என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். 5வது பாகமாக தற்போது இந்தப் படம் வெளியாகியுள்ளது.
படத்தின் முதல் பாகம் ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு என்ற பெயரில் கடந்த 1988ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

நடிகர் மம்முட்டி
நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகின் முக்கியமான நாயகனாக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் சிறப்பான பல படங்கள் வெளியாகி மலையாள ரசிகர்களை மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. மலையாளத்தில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.

சிபிஐ 5 : தி ப்ரெயின் படம்
இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் சிபிஐ 5 : தி ப்ரெயின் என்ற படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு என்ற பெயரில் கடந்த 1988ல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் 5வது பாகமாக சிபிஐ தி ப்ரெயின் வெளியாகியுள்ளது.

5வது பாகம்
ராதா வினோத் ராஜூ என்ற ஐபிஎஸ் அதிகாரியை மையமாக வைத்து இந்தக் கேரக்டர் உருவாக்கப்பட்டதாக இயக்குநர் கே மது தெரிவித்துள்ளார். ஜாக்ரதா (1989), சேதுராம ஐயர் சிபிஐ (2004), நேரறியான் சிபிஐ (2005) என இந்தப் படத்தின் அடுத்தடுத்த நான்கு பாகங்கள் வெளியான நிலையில் கடந்த 1ம் தேதி சிபிஐ 5 : தி ப்ரெயின் படம் ரிலீசானது.

விரைவில் 6வது பாகம்
இதனிடையே இந்தப் படத்தின் 6வது பாகம் விரைவில் உருவாக உள்ளதாக நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார். துப்பறியும் பாணியில் இல்லாமல் ஊழல் மற்றும் கொள்ளையை கண்டுபிடிக்கும் வகையில் இந்தப்படம் உருவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சினிமா வரலாற்றில் ஒரு கேரக்டரை வைத்து 6வது பாகமாக உருவாகும் படம் என்ற பெருமையை சேதுராம ஐயர் பெற்றுள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு
இந்தப் படம் வெளியான போது திரையரங்குகள் கிடைக்காமல் படக்குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பீஸ்ட், கேஜிஎப் 2 மற்றும் நெஞ்சுக்கு நீதி படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்த நிலையில் இந்தப் படம் மாயாஜாலில் மட்டுமே வெளியானது. ஆனால் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு சிறப்பாக காணப்பட்டது.

ஓடிடியில் ரிலீஸ்
இதனிடையே தற்போது இந்தப் படம் வரும் 12ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெட்பிளிக்சில் இந்தப் படம் வெளியாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அதிகமான திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீசாக உள்ளது ரசிகர்களுக்கு சிறப்பான செய்தியாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications











