விரலை வெட்டினால் விரும்பியது நடக்கும்.. ஓடிடியில் பார்க்க வேண்டிய திகில் வெப் தொடர்..மண்டல மர்டர்ஸ்!

சென்னை: கொரோனாவிற்கு பின் ஓடிடி தளங்களின் வளர்ச்சி மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது. தியேட்டரில் வெளியாகும் படத்திற்கு ஈடாக, வாரா வாராம் புது புது திரைப்படங்கள் வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. இதனால், இதை பார்த்து ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த ரசிகர்களை கவரும் வகையில்
ஓடிடி தளங்களில் புதிய படைப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நெட் ஃப்ளிக்ஸில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளிவந்த மண்டல மர்டர்ஸ் (Mandala Murders) என்ற இணைய தொடர் க்ரைம் த்ரில்லர் ரசிகர்களை கவர்ந்தது அதன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

YRF என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கோபி புத்திரன் மற்றும் மனன் ராவத் இயக்கத்தில் வெளியாகி உள்ள மண்டல மர்டர்ஸ் (Mandala Murders) க்ரைம் திரில்லர் வெப் தொடராகும். இது "The Butcher of Benares" என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்தொடரில், வாணி கபூர், சுர்வீன் சாவ்லா, விஜய் ராஜ் குப்தா, ரகுபீர் யாதவ், ஜமீல் கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

Netflix Mandala Murders OTT
Photo Credit:

மண்டல மர்டர்ஸ் : எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடரில், டெல்லி காவல்துறை அதிகாரியான விக்ரம் சிங் (வைபவ் ராஜ் குப்தா), தனது சொந்த ஊரான சாரந்தஸ்பூர் கிராமத்திற்கு வருகிறார். அங்கு ஒரு குளத்தில் தலை துண்டிக்கப்பட்ட சடலம், உடல் அழிக்கப்பட்டு, தலையை மையமாக வைத்து கைகால்கள் தைக்கப்பட்டு, ஒரு மண்டல வடிவத்தில் மிதக்கிறது. இந்தகொலையை விசாரிக்க, CIB அதிகாரி ரியா தாமஸ் (வாணி கபூர்) மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் விக்ரம் சிங் (வைபவ் ராஜ் குப்தா) இணைந்து செயல்படுகின்றனர்.

கொடூரமான கொலை: விக்ரம் சிங்கின் சகோதரனை சிறு வயதிலேயே மர்மமான முறையில் இறந்துவிடுகிறான். மேலும், அவனின் தாயார் மர்மமான முறையில் காணாமல் போனதும் விக்ரமின் மனதை பாதிக்கிறது. இதற்கும், குளத்தில் கிடந்த கொலைக்கும், தனது தாய் மர்மமான முறையில் காணாமல் போனதற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என நம்பும் விக்ரம் சிங், இந்த விசித்திரமான கொலையின் பின்னணி தேடி அலைகிறார். பல மர்ம முடிச்சுக்கு பிறகு, புராண உருவத்தை உயிர்ப்பிக்க மனித உடல் பாகங்களைப் பயன்படுத்தி மண்டல வடிவில் சடங்குகளுக்கு பலி கொடுக்கப்படுவதில் செல்கிறது.

திகில் தொடர்: விரலை இயந்திரத்தில் வெட்டி பலியிட்டால், விரும்பிய ஆசை நிறைவேறும் என்ற சடங்கு காட்சி திகில் ஏற்படுத்துகிறது. மண்டலா குழுவைச் சேர்ந்த பெண்கள் இது உலக நன்மைக்காக என்று நம்புகிறார்கள். அவர்களின் முறை தவறானது என்று அறியாமலேயே, மனிதர்களைப் பலியிடும் இந்த சடங்கு சிறந்த உலகத்தை உருவாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த தொடரில் பல காட்சிகள் வன்முறையாக இருந்தாலும் அது ஒரு வரம்பிற்குள் தான் இருக்கிறது. இருப்பினும், மண்டலா குழுப் பெண்கள் மனித படுகொலைகளுக்குத் தயாராகும் போது ஒருவித பயத்தை இந்த தொடரை பார்ப்பவர்களில் மனதில் ஏற்படுகிறது. க்ரைம், த்ரில்லர் படத்தை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்த தொடர் நிச்சயம் பிடிக்கும். இந்த நெட் ஃப்ளிக்ஸில் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் 25ந் தேதி வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X