Mangalvaaram ott: திருமணத்தை தாண்டி உறவு வைத்தால் சாவுதான்.. ஓடிடியில் வெளியாகும் மங்களவாரம்!

சென்னை: இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி உள்ள மங்களவாரம் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற தலைப்புடன் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது.

இப்படத்தில் அஞ்சாதே அஜ்மல், அட்டக்கத்தி நந்திதா ஸ்வேதா, பயல் ராஜ்புத், ரௌத்திரம் படத்தில் நடித்த சைதன்யா, ரவீந்திரா விஜய் என தமிழ் படங்களில் பார்த்த சில முகங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மாவுடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Mangalavaaram movie will be streaming from dec 26 on Disney Plus Hotstar

ஆர்டிஎக்ஸ் 100 படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பயல் ராஜ்புத் இந்த படத்திலும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி கனகச்சிதமாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டையும் பெற்றார்.

மங்களவாரம்: மகாலக்‌ஷ்மிபுரம் எனும் ஊரில் ஒரு செவ்வாய்க்கிழமை அன்று ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்ததாக ஒரு சுவரில் எழுதப்பட்டு இருந்ததை ஊர் மக்கள் பார்க்கிறார்கள். இதையடுத்து, அடுத்த வார செவ்வாய்கிழமையும் இரண்டு பேர் உயிரிழக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் விசித்ரமான முறையில் மரணங்கள் நிகழ அதுகுறித்து விசாரிக்க பெண் போலீஸ் அதிகாரி (நந்திதா ஸ்வேதா) ஊருக்குள் வருகிறார்.

தொடர் மர்ம மரணம்: ஆனால், அந்த ஊரின் ஜமீந்தார் வாரிசு விசாரணைக்கு தடையாக இருக்கிறார். அதையும் மீறி, நந்திதா ஸ்வேதா விசாரணையை தொடங்குகிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது... தொடர் மர்ம மரணத்திற்கு என்ன காரணம் என்பது தான் படத்தின் மீதிக்கதை. ஹாரர் த்ரில்லர் படமாக இயக்கி உள்ளார் அஜய் பூபதி. கவர்ச்சிக்கு கவர்ச்சி, நடிப்புக்கு தீனிப்போட்டுள்ள நடிகை பயல் ராஜ்புத்தை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போனார்கள்.

புதிர், அமானுஷ்யம், பயம்: இத்திரைப்படம் மங்களவாரம் எனும் தலைப்பில் தெலுங்கில் வெளியாகி இத்திரைப்படம், பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தமிழில் செவ்வாய்க்கிழமை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காந்தாரா திரைப்படம் போலவே இந்தப்படத்திலும் புதிரும் அமானுஷ்யமும் பயமும் நிறைந்து இருந்தது. அதற்கு தகுந்த இசை பல காட்சிகளில் பயத்தை அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஓடிடி ரிலீஸ்: கடந்த மாதம் 17ந் தேதி தியேட்டரில் வெளியான இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரசிகர்கள் ட்விட்டரில் 5க்கு 3.5 மதிப்பெண் கொடுத்திருந்தார்கள். திகிலூட்டும் ஹாரர் பட்மாக உருவாகி உள்ள இப்படம் நாளை டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் வெளியாக உள்ளது. தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்ட ரசிகர்கள் ஹாயாக வீட்டில் இருந்து கொண்டு இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X