Kudumbasthan OTT: 2025இல் தரமான வெற்றியைப் பெற்ற குடும்பஸ்தன்.. ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு
சென்னை: நடிகர் மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன படம் குடும்பஸ்தன். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படம் குடும்பஸ்தன். இந்தப் படம் இந்த ஆண்டில் வெற்றி பெற்ற இரண்டாவது படமாக மாறியது. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு இப்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நக்கலைட்ஸ் யூடியூப் தளத்தின் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானவர் ராஜேஷ்வர் காளிசாமி. படத்தின் கதையை ராஜேஷ்வர் காளிசாமியும் பிரசன்னா பாலச்சந்திரனும் இணைந்து எழுதியுள்ளார்கள். வைஷாக் இசையமைத்த இந்தப் படத்திற்கு சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது மட்டும் இல்லாமல், படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவையில் நடத்தப்பட்டது.

குடும்பஸ்தன்: நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டதால், படம் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரும் படம் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்ததால், குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் குடும்பஸ்தன் படத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள். இதனால் படம் சக்கைபோடு போட்டது.

ஓடிடி: படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க நினைத்த ரசிகர்கள், ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் என பலருக்கும் படக்குழு தரப்பில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் 7ஆம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் ஓடிடி தளத்திலும் சக்கை போடு போடும் என்பதால், ஜீ5 தரப்பிலும் மகிழ்ச்சியாக உள்ளார்களாம். ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா படம்தான்.



Click it and Unblock the Notifications











