கடனால் பாடாய்படும் மணிகண்டன்.. குடும்பஸ்தன் படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

சென்னை: ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த மணிகண்டன், இன்று தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு நல்ல இடத்தை பிடித்து நடிகராக மாறி இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் 24ந் தேதி குடும்பஸ்தன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. நடுத்தர குடும்பத்தில் ஒரு இளைஞன் என்ன மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்கிறான் என்பதை தனது தனித்துவமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் மணிகண்டன். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய் பீம், குட் நைட், லவ்வர் என தனக்கு தகுந்தபடி கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மணிகண்டன் நடிப்பில் வெளியானத் திரைப்படம் குடும்பஸ்தன். அறிமுக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கும் இந்த படத்தில், குரு சோமசுந்தரம், சான்வி மேகனா, சுந்தர்ராஜன் மற்றும் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் நடித்த பலர் இதில் நடித்துள்ளனர்.

kudumbasthan zee5

குடும்பஸ்தன்: இப்படத்தில் வேறு ஒரு ஜாதிப் பெண்ணான கதாநாயகி சான்வி மேகனாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ மணிகண்டன். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். சம்பளம் வந்தால், ராஜ வாழ்க்கை, மாத கடைசியில் கடன் என இவரது வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது. மணிகண்டனின் அக்கா கணவர் சோம சுந்தரம், பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். நல்ல சம்பளத்தை வாங்குவதால், அவருக்கு குடும்பத்தில் நல்ல மரியாதை. ஆனால், மணிகண்டனுக்கு அந்த மரியாதை இல்லை.

எதார்த்தமான நடிப்பு: இந்த நேரத்தில், மணிகண்டனுக்கு வேலையில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு வேலை போய்விடுகிறது. அந்த விஷயத்தை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வைத்து, வட்டிக்கு பணம் வாங்கி சம்பளமாக கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம், அக்காவின் கணவர் சோம சுந்தரத்திற்கு தெரியவர, மணிகண்டனை அவமானப்படுத்தி விடுகிறார். இதனால், பிரச்சனை வெடிக்கிறது. வேறுவழியே இல்லாமல், பேக்ரி ஒன்றை கடன் வாங்கி ஆரம்பிக்க கடைசியில் அதிலும் நஷ்டம் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் சான்வி மோகன், குழந்தை பிறக்கும் நேரத்தில், இப்படியா பொறுப்பு இல்லாமல் இருப்பது, தன்மானத்தை விட்டு விட்டு வேலைக்கு போ.. இல்லனா நான் போகிறேன் என்று சொல்ல, தன்மானத்தைவிட்டு விட்டு,பழைய கம்பேனிக்கு வேலைக்கு போகிறார் மணிகண்டன்

ஓடிடி ரிலீஸ்: வழக்கமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மணிகண்டன், இந்த முறையும் குடும்பஸ்தன் என்ற நல்ல கதை அம்சம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார். மனைவி, அம்மா, அப்பாவின் தேவைக்காகப் பணத்தை தேடி ஓடுவது, குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் திண்டாடுவது, அதற்காகத் தன்மானத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என முறுக்கிக் கொண்டு நிற்பது என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குடும்பஸ்தன் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து கணிசமான வசூலை அள்ளிய இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி ஜீ5 OTT தளத்தில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X