Lover OTT: உங்க காதல் டாக்ஸிக் காதலா? அப்போ ஓடிடியில் லவ்வர் படத்தை பாருங்க!

சென்னை: மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி வெற்றிநடை போட்ட லவ்வர் திரைப்படம் ஓடிடியில் தற்போது வெளியாகி உள்ளது. காதலர்களின் கவனத்தை கவர்ந்த இப்படத்தை தியேட்டரில் பல காதலர்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து சென்றனர். அப்படத்தை இயக்குநர் செல்வராகவன் வெகுவாக பாராட்டி இருந்தார்.

சில்லு கருப்பட்டி, ஜெய் பீம், குட் நைட் என தரமான படங்களை தேர்வு செய்து நடித்து, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் மணிகண்டன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு குறட்டையை மையமாக வைத்து உருவான குட்நைட் படத்தில் மோட்டர் மோகனாக நடித்திருந்தார். வெளிநாட்டில் குறட்டைவிட்டால், டைவர்ஸ் வாங்கிவிடுவார்கள் பலர் விளையாட்டாக சொல்லி நாம் கேள்விப்பட்டு சிரித்து இருப்போம். உண்மையில் குறட்டையால் ஒருவர் எந்த அளவிற்கு மனதளவில் பாதிக்கப்படுகிறார் என்பதை இப்படத்தில் அழகாக சொல்லி இருப்பார் இயக்குநர்.

Manikandan s lover movie Streaming Now in disney plus hotstar

மணிகண்டனின் லவ்வர்: இந்த படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய மணிகண்டன் அடுத்ததாக லவ்வர் திரைப்படத்தில் நடித்திருந்தார். எத்தனை ஆண்டுகள் உருகி உருகி காதலித்தாலும், அந்த காதல் ஒரு கட்டத்திற்கு மேல், ஏன் வெறுப்பாக மாறுகிறது. காதலின் அதீத அன்பே, காதலர்களின் பிரிவுக்கான காரணமாக மாறுகிறது என்பதை, அழகான காதலோடு லவ்வர் படத்தில் கூறி இருந்தார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.

வசூலை அள்ளியது: வசூலை அள்ளியது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் திரைப்படம் அதே தேதியில் வெளியானதால், லவ்வர் படம் வெளியான போது குறைந்த அளவிலான திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், லவ்வர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்தால், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. இதனால் இப்படம் நாளடைவில் பிக் அப் ஆகி வசூலை அள்ளியது.

Manikandan s lover movie Streaming Now in disney plus hotstar

காதலர்கள் கொண்டாடிய படம்: காதலர்களிடம் வரவேற்பு: ரஜினி நடித்த படத்துக்கு போட்டியாக மணிகண்டன் நடித்த லவ்வர் படம் வசூலித்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. காதலர்களாளும், காதல் தோல்வியாலும் துவண்டு இருந்த காதலர்களுக்கு லவ்வர் திரைப்படம் பிடித்துப்போனதால், காதலர் தினத்தில் இந்த படம் தியேட்டருக்கு பல காதலர்கள் படையெடுத்தனர். இந்த படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன், தனது ட்விட்டர் பக்கத்தில், Loved it. படம் பார்த்த சில நிமிடங்களுக்கு பிறகு நான் படம் பார்க்கிறேன் என்பதை மறந்துவிட்டேன். அந்த அளவுக்கு ரியலிட்டிக்காக இருந்தது என்று லவ்வர் பட இயக்குநரை பாராட்டி இருந்தார்.

ஓடிடியில்: அப்படி காதலர்களால் கொண்டாடப்பட்டு வசூலை அள்ளிய லவ்வர் திரைப்படம் ஓடிடியில் மார்ச் 27 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. மார்ச் 27 நள்ளிரவு முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம். உங்க காதல் டாக்ஸிக்காக இருந்தா என்ன செய்வது என்று இந்த படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X