திருமணத்துக்குப் பிறகு விலை மாதுவாக நடித்த மஞ்சிமா மோகன்.. சுழல் 2 வெப்சீரிஸில் தரமான சம்பவம்!
சென்னை: நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக்கை திருமணம் செய்துக் கொண்ட மஞ்சிமா மோகன் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது நடிப்பில் கடந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் சுழல் 2 வெளியானது. அந்த வெப்சீரிஸில் மஞ்சிமா மோகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் மஞ்சிமா மோகன். 2023ம் ஆண்டு அவர் நடித்த Boo திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் சுழல் 2 வெப்சீரிஸில் நாகம்மா எனும் கதாபாத்திரத்தில் கயல் சந்திரனுக்கு ஜோடியாக ஃபிளாஷ்பேக் போர்ஷனில் நடித்துள்ளார்.

சுழல் 2வில் முக்கிய கதாபாத்திரங்களான அந்த 8 பெண்களையும் பாதுகாக்கும் நாகம்மா கதாபாத்திரத்தில் நடித்த மஞ்சிமா மோகன் ஒரு சீனில் விலை மாதுவாகவே நடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகைகளுக்கு சவாலான ரோல்: இதுவரை ஆஸ்கர் வாங்கிய 16 நடிகைகள் விலை மாதுவாக நடித்து ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற அனோரா படத்தின் நடிகை மைக்கி மேடிசனும் அப்படி நடித்தவர் தான். பொதுவாகவே நடிகைகளுக்கு ரொம்பவே சவாலான கதாபாத்திரம் என்றால் அது விலை மாதுவாக நடிப்பது தான். போல்டான மன நிலை இருந்தால் மட்டுமே அப்படி நடிக்க முடியும். அனுஷ்கா வானம் படத்தில் அந்த கதாபாத்திரத்தை அட்டகாசமாக ஏற்று நடித்திருப்பார். நடிகை சதாவும் டார்ச் லைட் படத்தில் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும், பல நடிகைகள் அந்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டுள்ள நிலையில், மஞ்சிமா மோகனும் அப்படி நடித்துள்ளார்.

விலை மாதுவாக மஞ்சிமா மோகன்: தனது கணவனாக நடித்த கயல் சந்திரன் குழந்தைகள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதை அறிந்துக் கொண்டு ஆத்திரத்தில் அவனது தலையை வெட்டி சாய்க்கும் போல்டான கதபாத்திரத்தில் வீரமங்கையாக நடித்துள்ள மஞ்சிமா மோகன் அந்த குழந்தைகளை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் பணம் சம்பாதிக்க யாரும் வேலையும் கொடுக்காத நிலையில், விலை மாதுவாக ஒரு காட்சியில் ரோட்டில் வந்து மற்ற விலை மாது பெண்களுடன் நின்றுக் கொண்டு ஒரு காரில் ஏறிச் சென்று மறுநாள் காலை அந்த குழந்தைகளுக்கு பொம்மையும், புது துணி மணியும் வாங்கி வரும் காட்சியில் கண் கலங்க வைத்திருப்பார். மஞ்சிமா மோகனின் நடிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஜோதிகா, நயன்தாரா போல திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











