OTT Review: ஓடிடியில் இந்த படத்தை பாருங்க.. செல் ஃபோனை தொடவே பயப்படுவீங்க.. பேயாட்டம்னா இதுதான்!
சென்னை: தமிழ் ரசிகர்களுக்கு மலையாளம் திரைப்படம் மீது மிகப் பெரிய ஆர்வமும்,காதலும் இருப்பதால், தொடர்ந்து மலையாள திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் 'சதுர் முகம்'. இப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இப்படத்தை ரஞ்சித் கமலா சங்கர், சலிலா வி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். திகிலூட்டும் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில், மஞ்சுவாரியர், சன்னி வெய்ன், அலென்சியர் லே லோபஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை ஆரம்பிக்கும் போதே குடும்பத்தைவிட்டு பிரிந்து, மஞ்சு வாரியர் சிட்டியில் உள்ள ஒரு கேமரா பொருத்தும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு அங்கேயே ஹாஸ்டலில் தங்கி வருகிறார். கடவுள் மீது பெரிதாக நம்பிக்கை இல்லாத மஞ்சு வாரியருக்கு ஊரில் திருவிழா நடப்பதாக அம்மா சொல்ல, திருவிழாவிற்காக கிராமத்திற்கு வருகிறாள் மஞ்சு வாரியா. அப்போது அங்கு நடக்கும் நிகழ்ச்சியை வீடியோவாக எடுத்துக் கொண்டு இருந்தபோது, பேய் பிடித்த பெண் ஒருவர் வந்து செல்போனை தட்டி விட, செல்போன் குளத்தில் விழுந்து விடுகிறது. கையில் பணம் இல்லாததால் மஞ்சு வாரியர், ஆன்லைனில் குறைந்த விலையில் ஒரு ஃபோனை வாங்குகிறார்.

மலையாளத் திரைப்படம் சதுர் முகம்: ஃபோன் கையில் வந்ததில் இருந்தே ஏதோ பிரச்சனை வந்து கொண்டே இருக்க, இனிமே இந்த ஃபோனை பயன்படுத்தக்கூடாது என முடிவு செய்த மஞ்சுவாரியர் சிம்பை கழட்டிவிட்டு பீரோவில் வைக்கிறாள். ஆனால், பீரோவில் வைத்த போனில் இருந்து அம்மாவிடம் இருந்து அழைப்பு வருகிறது. இதனால் பயந்து போன மஞ்சு வாரியர், இந்த விஷயத்தை நண்பனிடம் சொல்கிறாள். ஆனால், நண்பன் அதை விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் அந்த ஃபோனால் மன உளைச்சலுக்கு ஆளான மஞ்சுவாரியர், கனரகம் வாகனம் வரும் ரோட்டில், லாரி வரும் நேரத்தில், செல்போனை போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் செல்கிறாள். ஆனால், லாரி, செல்போன் மீது ஏறிய போதும், செல்போனில் டிஸ்பிளே உடைந்து நொங்கிய போதும் போனில் இருந்து அழைப்பு வருகிறது.

செல்போனில் ஆட்டம்: இதனால், மஞ்சுவாரியர் ஓடி போய் போனை எடுக்க முயற்சி செய்கிறாள், ஆனால், போனோடு சேர்ந்து, கையும் சாலையோடு ஒட்டிக்கொள்ள கையை எடுக்க முடியாமல் தவிக்கிறாள். அதுமட்டுமில்லாமல், செல்போனின் டிஸ்பிளே உடைந்து இருப்பது போல, மஞ்சுவாரியன் முகத்திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிகிறது. அந்த நேரம் லாரி ஒன்று வேகமாக வந்து மஞ்சுவாரியர் மீது மோதும் நேரத்தில், சாலையில் ஒட்டி இருந்த கை விடுபட மஞ்சுவாரியர் தூக்கி விடப்படுகிறாள். அதன் பிறகு தான் இந்த ஃபோனில் ஏதோ ஒரு அனுமானுஷ்யம் இருக்கிறது என்தை தெரிந்து கொண்ட மஞ்சுவாரியார். இந்த போனை யார் யாரெல்லாம் பயன்படுத்தினார்கள், அவர்களுக்கும் இதே பிரச்சனை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக இணையத்தில், இந்த போனை வாங்கியவர்களின் லிஸ்டை எடுத்து, அவர்களின் வீட்டு முகவரியை தேடி செல்ல, அந்த போனை பயன்படுத்திய அனைவரும் கொடூரமான முறையில் இறந்தது தெரியவருகிறது.

குறையும் ஆயுள் காலம்: அதுமட்டுமில்லாமல், இந்த போனில் ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுக்கும் போதும், அதில், இனி எத்தனை நாட்கள் உயிரோடு இருக்கப்போகிறார்கள் என்கிற நம்பர் தெரிகிறது. அதை பார்த்து பயந்துபோன மஞ்சுவாரியர், தன்னை செல்ஃபி எடுத்து பார்க்க அதில் 14 நாட்கள் என்று வருவதால் பயந்து போய், நண்பனின் உதவியுடன் பேய் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவரின் செல்கிறாள். அதன் பின் மஞ்சு வாரியாருக்கு என்ன ஆனாது? செல்போனில் எப்படி பேய் வந்தது... அந்த செல்போன் பேயால் மஞ்சுவாரியர் சந்தித்த பிரச்சனை என்ன என்பது தான் இந்த படத்தின் மீதி கதை. இந்த படம் வழக்கம் போல பேய் திரைப்படம் போல திகில் திரைப்படமாக இல்லாமல், அடுத்தடுத்த ட்விஸ்டுகள் கொண்ட கதையாக இருந்ததால், ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தின் மீதான சுவாரசியம் குறையவே இல்லை. தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த திரைப்படத்தை ஜீ5, அமேசான் பிரைமில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications