ஓடிடியில் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ், ஹனுமான்.. எந்த தளத்தில் தெரியுமா?
சென்னை: சூப்பர் ஹிட் திரைப்படமான அதிக வசூலை அள்ளிய ஹனுமான் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள என பதிப்புகளில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை,பார்க்க ஆவலாக உள்ளனர்.
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படம் தான் ஹனுமான். அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும். இப்படத்தில் தேஜா சஜ்ஜா,அமிர்தா ஐயர், வரலட்சுமி, சமுத்திரக்கனி, வினய் ராய் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கௌரா ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்

ஹனுமான்: ஹனுமான் கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடித்திருந்தார். அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மூலம் தனது சக்தியைப் பெறும் சூப்பர் ஹீரோவான மைக்கேலை, ஹனுமந்து எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை. ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக தெலுங்கில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது ஹனுமான் திரைப்படம். தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாகி வசூலை அள்ளியது. ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படத்தை இன்று முதல் தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
மஞ்சும்மல் பாய்ஸ்: இப்படத்திற்கு போட்டியாக மற்றொரு திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது. மலையாளத்தில் பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் மலையாள படம் என்கிற சாதனையை இப்படம் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்தது. இதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் தான்.
ஒடிடியில்: திரையரங்கில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை இன்று முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். இது கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சம்பவம்: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்த 11 நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறது. அதில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கதை. இப்படம் 2006ம்ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











