OTT: அடேங்கப்பா.. ஹனுமான், மஞ்சுமெல் பாய்ஸ் ஒரே நாளில் இந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறதா?.. எப்போ?

சென்னை: ஒரு பக்கம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சத்தமே இல்லாமல் நல்ல படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி வெளியிட்டு வருகிறது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகவில்லை என கலாய்க்க பட்டு வந்த நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியான ஹனுமான் தமிழ் டப்பிங் எந்த ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பும் தற்போது அதிரடியாக வந்திருக்கிறது.

Manjummel Boys and Hanuman OTT rights bagged by Disney plus Hotstar

300 கோடி வசூல்: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது, தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமான் திரைப்படம் தான். இந்த ஆண்டு பொங்கலுக்கு மகேஷ்பாபு நடித்து வெளியான குண்டூர் காரம் படத்துடன் போட்டியாக வெளியான ஹனுமான் திரைப்படம் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 300 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் அள்ளியது. தென்னிந்தியாவை தாண்டி வட இந்தியாவில் தான் இந்த படம் அதிக வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் சிறப்பை முன்னிட்டு ஹனுமான் படம் வெளியான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அந்தப் படத்தைப் பார்த்து வெற்றி பெற செய்தனர்.

ஹனுமான் தமிழ் ஓடிடி ரிலீஸ்: ஜியோ சினிமாவில் இந்தியிலும், ஜீ சினிமாவில் தெலுங்கிலும் கடந்த வாரமே வெளியானது. ஆனால், அதில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழியில் படம் இல்லையே என ரசிகர்கள் தேடிப் பார்த்து கடுப்பாகி விட்டனர். இந்நிலையில், தற்போது வரும் ஏப்ரல் 5ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹனுமான் வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு ஓடிடி நிறுவனத்துக்கும் ஒவ்வொரு மொழியில் பிரித்துக் கொடுத்து டிஜிட்டல் உரிமத்தில் மிகப்பெரிய தொகையை அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது தெரிய வருகிறது.

Manjummel Boys and Hanuman OTT rights bagged by Disney plus Hotstar

மஞ்சுமெல் பாய்ஸும் அதே நாளில்: ஹனுமான் படம் மட்டுமல்ல 200 கோடி ரூபாய் வசூல் செய்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தையும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி உள்ளது. அந்த படமும் வரும் ஏப்ரல் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. அடுத்த வாரம் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் வெளியாகும் இந்த 2 படங்களையும் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X