தொடர்ந்து சிக்கலில் மஞ்சும்மல் பாய்ஸ்.. ஓடிடியில் வெளியாகவில்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்!
சென்னை: ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி திரையரங்கில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 5ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் இதுவரை வெளிவராததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்திற்கு தமிழில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவே நினைத்து இருக்க மாட்டார்கள். மலையாள சினிமாவில் வரலாற்றில் அதி விரைவில் 200 கோடி வசூல் ஈட்டிய முதல் படம் என்கிற பெருமை மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ்: அது மட்டுமில்லாமல், படத்தில் 40 சதவீத மலையாளம், 60 சதவீத தமிழ் இருந்ததும், படத்தில் அவ்வப்போது வந்த கண்மணி அன்போடு காதலன் இசையும் தமிழ் ஆடியன்ஸ் ரசித்தது தான் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம். சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமில்லாமல் சிற்சில ஊர்களில் கூட இப்படம் திரையிடப்பட்டது. மல்டிப்ளக்ஸில் தியேட்டர்களில் படம் வெளியாகி இரண்டு மாதம் ஆனபோதும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
பல கோடிக்கு விற்பனை: இப்படியான நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது. அதற்கு காரணம் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் அளவிற்கு விற்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்ததால், படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை.
சிக்கலில் மஞ்சும்மல் பாய்ஸ்: இதையடுத்து, பல ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் ஒருவழியாக மஞ்சும்மல் பாய்ஸ் படம் ஏப்ரல் 5ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தோடு தெலுங்கில் சக்கைப்போடு போட்ட ஹனுமான் திரைப்படத்தின் தமிழ் வெர்ஷனும் அதே தேதியில் வெளியாகும் என் டிஸ்னி தளம் அறிவித்து இருந்தது. இதில் ஹனுமான் திரைப்படம் அறிவித்த படி 5ந் தேதி வெளியாகிவிட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் அறிவித்தபடி ஓடிடியில் வெளியாகவில்லை. வார இறுதி நாட்களில் வீட்டில் ஜாலியாக படத்தை பார்க்க ஆவலுடன் கத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். படம் எதனால் வெளியாகவில்லை, என்ன சிக்கல் என்று ஓடிடி தளம் எதுவும் சொல்லாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications











