முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்கும் மனோ பாலா.. டைட்டிலே டக்கரா இருக்கே!
சென்னை: நடிகர் மனோபாலா முதல் முறையாக வெப் சீரிஸில நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனோ பாலா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர்.
தமிழ் சினிமாவில் இதுவரை 900க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகர், வில்லன் நடிகர், குணச்சித்திர நடிகர் என பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

40 படங்கள் இயக்கம்
ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன், விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 19 டிவி தொடர்களையும் இயக்கியிருக்கிறார். பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வாழ்த்து கூறும் மனோ பாலா
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மனோ பாலா அவ்வப்போது சக நட்சத்திரங்களுக்கு பிறந்த நாள் என்றால் வாழ்த்து கூறுவது, புதுப்படம் ரிலீஸ் என்றால் வாழ்த்து கூறுவது, இசை வெளியீடு என்றால் வாழ்த்து கூறுவது என ரகளை செய்து வருகிறார்.

கொஞ்சமும் அசருவதில்லை
அதுமட்டுமின்றி ஹீரோயின்களுக்கு போட்டியாக கலக்கல் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். என்ன மாதிரியான கமெண்ட்ஸ் வந்தாலும் கொஞ்சமும் அசராத மனோபாலா தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார்.,

யூட்யூப் சேனல் நடத்தும் மனோ பாலா
அரசியலிலும் தீவிரமாக உள்ளார் மனோ பாலா. அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் மனோ பாலா, பிரபலங்கள் பலரையும் பேட்டிக் கண்டு சுவாரசிய தகவல்களை வெளிக் கொண்டு வருகிறார். தயாரிப்பாளராக வலம் வரும் மனோ பாலா சதுரங்க வேட்டை' 'பாம்பு சட்டை' உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

முதல் முறையாக வெப் சீரிஸ்
இந்நிலையில் நடிகர் மனோ பாலா முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்கு மிஸ்டர் உத்தமன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார். இவர் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவுக்கு தம்பியாக நடித்திருந்தார்.

நாளை மறுநாள் ரிலீஸ்
யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இந்த வெப் சீரிஸில் லீடிங் ரோலில் நடிக்கிறார். காதல் காமெடி என கலந்து கட்டி உருவாகும் இந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள் ஸ்டே டியூன் என்ற யூட்யூப்பில் வெளியாக உள்ளது. மனோ பாலா முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்க உள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











