OTT: சினிமா ரசிகர்களே ரெடியா? இன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்!
சென்னை: தியேட்டரில் வெளியாகும் படங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே அவற்றுக்கு இணையாக ஓடிடியில் வெளியாகம் படங்களை வார கடைசியில் குடும்பத்தோடு பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக இன்று பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாகி உள்ளன.\
மேட் இன் கொரியா: கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்து இருக்கும் படம் 'மேட் இன் கொரியா' கொரியாவைப் பற்றிய பேராசையுடன் வாழும் ஒரு கிராமத்து பெண்ணாக இப்படத்தில் பிரியங்கா மோகன் நடத்துள்ளார். இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி நடத்தில் வெளியாகி உள்ளது.

கருப்பு பல்சர்: தினேஷ் நடிப்பில் வெளியாகிய ட்ராமா படம் கருப்பு பல்சர் மார்ச் 13-ந் தேதி டெண்ட்கொட்டா ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இது திரில்லர் மற்றும் ஆக்ஷன் படப் பிரியர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. புதுமுக இயக்குநர் முரளி கிருஷ் இயக்கி இருக்கும் இப்படம்,கருப்பு நிற பல்சர் பைக்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்டவர்கள் இன்று இந்த படத்தை ஒடிடியில் பார்க்கலாம்.

பூக்கி: கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷான், தனுஷா நடிப்பில், விஜய் ஆண்டனி தயாரித்த பூக்கி திரைப்படம் கடந்த மாதம் காதலர் தினத்தன்று தியேட்டரில் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படத்தில் மார்கன் படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனியின் மருமகன் அஜய் திஷன் இந்த படத்தில் லீட்ரோலில் நடித்துள்ளார். ரொமான்ஸ் மற்றும் காமெடி ஜானரில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கி உள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக் பாஸ் சத்யா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய நடித்துள்ளனர். இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி: காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ந் தேதி 'கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி' திரைப்படம் தியேட்டரில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளியது. பீல் குட் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் காதல் திரைப்படத்தில், சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி லீட்ரோலில் நடித்துள்ளனர். அஷ்வின் சந்திரசேகர் இயக்கிய இப்படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் மார்ச் 13 தேதியான இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
Locals Times: தொடர்ந்து மாறிவரும் டிஜிட்டல் ஊடகச் சூழலுக்கு மத்தியில், நலிவடைந்து வரும் 'நம்ம செய்தி' எனும் தமிழ் செய்தித்தாளைக் காப்பாற்றப் போராடும் நான்கு நண்பர்களைப் பற்றிய தொடராகும். இந்த நால்வரும் பல்வேறு விபரீதங்களையும், எதிரிகளையும் எதிர்கொள்கின்றனர். அப்போது, தாங்கள் பெரிதும் நேசிக்கும் அந்த உள்ளூர் வார இதழின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க, அவர்கள் தங்கள் ஆழமான நட்பையே உறுதுணையாகக் நம்புகின்றனர். 'Locals Times' தொடரில் ரிஷிகாந்த், அப்துல் லீ, அத்விதா அருமுகம் மற்றும் மௌரிஷ் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
'Aspirants' சீசன் 3: சந்தீப் ஓலன் முன்வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அபிலாஷ் மீது ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது தீபா, குரி மற்றும் Abhilash Thapliyal ஆகியோரின் நட்பில் விரிசலை ஏற்படுத்துகிறது. அதே வேளையில்,IRS தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், IAS தேர்வை எழுதுவதற்காகக் கடைசி முறையாக முயற்சிக்கிறார் அபிலாஷ், அங்கும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இந்தி வெப்தொடர் பிரைம் வீடியோவில் இன்று வெளியாகி உள்ளது. சன்னி ஹிந்துஜா, ஜதின் கோஸ்வாமி, அபிலாஷ் தப்லியால், சிவன்கித் சிங் பரிஹார், நமிதா துபே மற்றும் தெங்கம் செலின் ஆகியோரும் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











