மார்ச் ஓடிடி ரிலீஸ்... ஹாலிவுட், பாலிவுட் படங்களை பத்தி பாக்கலாமா!

சென்னை : மார்ச் மாதம் பிறந்துள்ள நிலையில் இந்த மாதத்தில் திரையரங்குகளில் அதிகமான படங்கள் ரிலீசாக உள்ளன.

ஓடிடியிலும் நாய் சேகர், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் தமிழில் ரிலீசாக உள்ளன.

இதனிடையே மார்ச் மாதத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

மார்ச் ரிலீஸ் படங்கள்

மார்ச் ரிலீஸ் படங்கள்

மார்ச் மாதம் இன்றைய தினம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் எந்தெந்த படங்கள் தமிழில் மற்றும் உலகளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மாதத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விக்ரம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளன.

திரையரங்கு ரிலீஸ் படங்கள்

திரையரங்கு ரிலீஸ் படங்கள்

இதனிடையே ஆர்ஆர்ஆர், காட்டேரி, ஓ மை டாக், உள்ளிட்ட படங்களும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக 50 சதவிகித பார்வையாளர்களே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிகரித்த பார்வையாளர்கள்

அதிகரித்த பார்வையாளர்கள்

இதையடுத்து திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு கடந்த 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான வலிமை படமே சாட்சி. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மூன்றே நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

ஓடிடி தமிழ் ரிலீஸ் படங்கள்

ஓடிடி தமிழ் ரிலீஸ் படங்கள்

இதனிடையே மார்ச் மாதத்தில் ஓடிடியில் ரிலீசாகவுள்ள படங்களில் முக்கிய கவனத்தை தனுஷின் மாறன் படம் பெற்றுள்ளது. இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து நாய் சேகர், கடைசி விவசாயி, தேள், வீரபாண்டியபுரம், 83 போன்ற படங்களும் இந்த மாதத்தில் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.

ஓடிடி பாலிவுட் படங்கள்

ஓடிடி பாலிவுட் படங்கள்

இதனிடையே பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் ருத்ரா, உந்தகி வெப் தொடர் சீசன் 2, சட்லியன் வெப் தொடர், ஜுகாதிஸ்தான் வெப் தொடர் போன்ற படைப்புகள் இந்த மாதத்தில் வெளியாகவுள்ளன. இதில் அஜய் தேவ்கனின் ருத்ரா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் மூலம் அவர் முதல்முறையாக ஓடிடியில் காலடி எடுத்து வைக்கவுள்ளார்.

ஓடிடி ஹாலிவுட் படங்கள்

ஓடிடி ஹாலிவுட் படங்கள்

இதேபோல பீசஸ் ஆப் ஹர் வெப் தொடர், தி ஆன்டி வார்ஹோல் டயரீஸ் டாகுமென்டரி தொடர், டிஸ்னியில் டர்னிங் ரெட் அனிமேஷன் படம், சயின்ஸ் பிக்ஷனாக உருவாகியுள்ள தி ஆதாம் பிராஜக்ட், வீ கிராஷ்டு, ஹுமன் ரிசோர்சஸ் அனிமேஷன் படம், பிரிட்ஜர்டன் சீசன் 2 போன்ற படைப்புகள் இந்த மாதத்தில் வெளியாகவுள்ளன.

ஏராளமான படங்கள்

ஏராளமான படங்கள்

இந்த மாதத்தில் தமிழில் மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட்டிலும் பல படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன. மேலும் குழந்தைகளை மையமாக வைத்து அனிமேஷன் படங்களும் வெளியாகவுள்ளன. இந்த மாதத்தில் எக்சாம் துவங்கிவிடும் என்றாலும் இடையில் சில மணிநேரங்களை செலவழித்து அவர்களை ஆசுவாசப்படுத்த பெற்றோர்களும் முயல்வார்கள் என்பதால் இந்தப் படங்கள் ரிலீசாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X