மார்கோ படத்துக்கு ஆப்படித்த தணிக்கை குழு.. சாட்டிலைட் ரைட்ஸ் மொத்தமும் ஸ்வாகா.. ஓடிடிக்கும் வேட்டு?
திருவனந்தபுரம்: ரன்பீர் கபூரின் அனிமல், லோகேஷ் கனகராஜின் படங்களில் வரும் ஓவர் வயலென்ஸ் காட்சிகளால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைக்கின்றன என்பதை பார்த்த மலையாள திரையுலகம் நாங்களும் எடுக்கிறோம் பாருங்கடா என மோஸ்ட் வயலன்ட் படமாக மார்கோ படத்தை கடந்த ஆண்டு எடுத்து வெளியிட்டது.
கேரளா மற்றும் வட இந்தியாவில் இந்த படம் சக்கைப் போடு போட்டது. 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்தது. ஓடிடியில் வெளியான பின்னரும் மார்கோ படத்திற்கு மவுசு குறையவில்லை. இந்நிலையில், தற்போது அந்த படத்துக்கு மிகப்பெரிய சிக்கல் கிளம்பியுள்ளது.

தணிக்கை குழு மார்கோ படத்துக்கு அதிகாரப்பூர்வ தடையை அறிவித்துள்ளது. தொலைக்காட்சியில் மார்கோ படத்தை ஒளிபரப்பக் கூடாது என உத்தரவு போட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஷெரிஃப் முகமது ஆடிப்போயிட்டார்.
ரத்தம் தெறிக்க தெறிக்க: துப்பாக்கியால் 100 பேரை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது கத்தி எடுத்துக் கொண்டு சரமாரியாக வெட்டி சாய்த்து ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைக் காட்சிகளில் நடித்தால் தான் மாஸ் ஹீரோவாக ஃபார்ம் ஆக முடியும் என சில தவறான உதாரணங்களை பல முன்னணி நடிகர்களும் தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு நல்ல நடிப்பை வெளிப்படுத்துவதை விட பிஜிஎம் போட்டுக் கொண்டு ஸ்டன்ட் மாஸ்டரின் கை வண்ணத்தில் நூறு லிட்டர் போலி ரத்தத்தை ஊற்றி கொடூரமாக கொலைகளை நடத்தி படங்களை ஹிட்டாக்கி வருகின்றனர்.
மார்கோ படத்துக்கு தடை: ஹனீஃப் அதேனி இயக்கத்தில் கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியான மார்கோ படத்தில் லீடு ரோலில் உன்னி முகுந்தன் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் வில்லன்கள் ஹீரோவின் கண் முன்னே கொடூரமாக கொன்று குவிக்கும் காட்சிகளுக்கு கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. கர்ப்பிணி வயிற்றில் இருந்து குழந்தையை கொடூரமாக எடுத்துக் கொண்டு வில்லன் செல்வதை எல்லாம் பார்த்து பலரும் இப்படியெல்லாம் கேவலமாக காட்சிகளை வைக்கலாமா? என கேரள முதலமைச்சருக்கே மனுக்களை பறக்கவிட அதனை தொடர்ந்து நடைபெற்ற கிடுக்கிபிடி விசாரணை காரணமாக தற்போது மார்கோ படத்துக்கு தணிக்கை குழு தடை விதித்துள்ளது.
டிவியில் ஒளிபரப்பக்கூடாது: மார்கோ திரைப்படம் தியேட்டரிலேயே மிகப்பெரிய தொகையை வசூல் செய்துவிட்டது. அதன் சாட்டிலைட் உரிமம் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை குழு டிவியில் ஒளிபரப்பக்கூடாது என அதிரடியாக தடை விதித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் சில காட்சிகளை நீக்கிவிட்டு ஒளிபரப்பு செய்ய உரிமை கோரியும் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இனிமேல், இந்த அளவுக்கு வன்முறையான படத்தை தயாரிக்கவே மாட்டேன் என ஷெரிஃப் முகமது கூறியுள்ளார்.
ஓடிடிக்கும் தடை?: சோனி லைவ் ஓடிடி தளத்தில் மார்கோ படத்தின் தென்னிந்திய வெர்ஷன் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் பலரும் பார்த்தாகி விட்டது. அமேசான் பிரைமில் இதன் இந்தி வெர்ஷன் வெளியானது. இந்நிலையில், தற்போது ஓடிடியில் இருந்து இந்த படத்தை நீக்கவும் அரசு தரப்பில் இருந்து வேலை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நயன்தாராவின் அன்னபூரணி ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டதை போல மார்கோவும் விரைவில் ஓடிடியில் இருந்து நீக்கப்படும் என்கின்றனர்.
நானி படம் என்ன ஆகுமோ?: அனிமல் படத்தை பார்த்து பல நடிகர்களும் ஆபாசமாகவும், ஆக்ரோஷமாகவும் படங்களில் நடித்து வருகின்றனர். கெட்ட வார்த்தையை பச்சைக் குத்திக் கொண்டு நானி தி பாரடைஸ் படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ், டிவி ஒளிபரப்புக்கு எல்லாம் சிக்கல் வருமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











