Bison OTT: ''பைசன்'' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்!

சென்னை: சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமின் நடிப்பில், கடந்த மாதம் 17ந் தேதி பைசன் திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜின் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள, இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து 'பைசன்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கபடி வீரராக துருவ் விக்ரம் நடித்திருந்தார். சொந்த ஊரில் இருக்கும் கபடி வீரர்கள் துருவ் விக்ரமை டீமில் சேர்த்துக்கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். பள்ளிக்கூடத்தின் துருவ் விக்ரமின் திறமையைப் பார்த்த பி.டி வாத்தியார், துருவ் விக்ரமிற்கு ஊக்கம் கொடுத்து அவனை கபடி வீரராக்குகிறார்.

bison Mari selvaraj OTT
Photo Credit:

பைசன்: பிடி வாத்தியாரின் முயற்சியால் ஊரில் நடக்கும் கபடி போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி அந்த ஊருக்கே பெருமை சேர்க்கிறார். ஊருக்கு பெருமை சேர்ந்த துருவ் விக்ரமிற்கு லால் ஆதரவாக இருக்க, அவர் கபடி போட்டியில் அடுத்தடுத்து வெற்றி வகை சூடுகிறார். இந்த நேரத்தில், துருவ் விக்ரமிற்கு பக்கபலமாக இருந்த அமீர் இறந்துவிட தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளை கடந்து துருவ் விக்ரம் எப்படி கபடி வீரராக மாறினார் என்பது தான் பைசன் படத்தின் கதை.

வசூல் மழை: துருவ் விக்ரமின் தந்தையா பசுபதியும், கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திரைமகுடத்தின் மற்றொரு வைரக்கல்லாக பைசன் திரைப்படம் அமைந்துள்ளது என பாராட்டி இருந்தார். அரசியல் பிரமுகர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி திரையுலக பிரபலங்கள் என அனைவரும் 'பைசன் காளமாடன்' படத்தை வெகுவாக பாராட்டினார்கள்.

ஓடிடி ரிலீஸ்: இந்நிலையில், 'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் நவம்பர் 21ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக உள்ளது. தியேட்டரில் பட்டையை கிளப்பிய பைசன் ஓடிடியில் எப்படி மாஸ் காட்டப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X