Vaazhai OTT : ஓடிடியில் வெளியானது வாழை..மிஸ் பண்ணாம பாருங்க!
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமாக வெளியான வாழை திரைப்படம் தியேட்டரில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற நிலையில், இத்திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23ந் தேதி வாழை திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இப்படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மணிரத்னம் ,பாலா, மிஷ்கின், பாரதி ராஜா, தனுஷ், விஜய்சேதுபதி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினர். குறிப்பாக இயக்குநர் பாலா படத்தை பார்த்துவிட்டு மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து கதறி அழுதார்.

மாரிசெல்வராஜின் வாழை: படத்தை பார்த்த பல திரை நட்சத்திரங்கள் படத்தை புகழ்ந்ததால், படம் பற்றிய எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்து தியேட்டருக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை கதைக்களமாக கொண்டு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், படிக்க விரும்பும் சிறுவன் சிவணைந்தன், வறுமையான குடும்ப சூழலில் வாங்கிக் கடனை அடைப்பதற்காக வாழைத்தார் சுமக்கும் வேலைக்கு செல்கிறார்.
உணர்வுபூர்வமான கதை: அங்கு குறைவான சம்பளத்திற்கு வேலை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வு கேட்டும் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தொழிலாளர்கள் நடத்தி போராட்டத்தை சமாளிக்க முடியாமல், வேறு வழியின்றி சம்பள உயர்வுக்கு ஒப்புக் கொள்கிறார் முதலாளி. சம்பள உயர்வு வாங்கியதை மனதில் வைத்துக் கொண்டு, தன்னிடம் பணியாற்றும் மக்களை வேறொரு பிரச்னைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறார் அந்த முதலாளி. இந்த ஆபத்தில் சிவணைந்தன் குடும்பம் எப்படி சிக்கியது என்பதுதான் படத்தின் கதை.
ஓடிடியில்: மிகவும் உணர்வு பூர்வமான இந்த படம் மக்களை கண்ணீரில் மூழ்கடித்தது எனலாம், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியும், அந்த பாடலும் கரையாத கல் மனதையும் கரையவைத்துவிட்டது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் தியேட்டரில் வெளியான நிலையில்,செப்டம்பர் 27ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதையடுத்து, வாலை திரைப்படம் அக்டோபர் 11ந் தேதியான இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தியேட்டரில் தவறவிட்டவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்,.
படத்தின் வெற்றி விழா: வாழை படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி மாரி செல்வராஜ், 'வாழை 2' படத்தை நிச்சயம் இயக்குவேன். அதே சிவனைந்தான் வைத்து இயக்குவேன். படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தின் பின்னால் இருக்கும் கதை அதில் இடம்பெறும் என்று பேசி இருந்தார். அதே போல, வாழை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பூங்கொடி டீச்சர் எங்கே என்று பலரும் கேட்டனர். டீச்சரின் மடியில் சிவனைந்தான் படுத்திருப்பது போலத்தான் காட்சியமைக்க நினைத்தேன். ஆனால், அந்த நேரத்தில் நிகிலா விமல், வேறு ஒரு படத்தில் கமிட்டாகி இருந்தார், அவரின் தேதி கிடைக்கவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், அந்த கிளைமாக்ஸில் வரும் பாடலே படப்பிடிப்பு முடித்து பலநாளுக்கு பிறகுதான் உருவானது என்றார்.


Click it and Unblock the Notifications











