Mark Antony: ட்ரெய்லரில் அமர்க்களப்படுத்திய மார்க் ஆண்டனி... கோடிகளில் விலைபோன OTT ரைட்ஸ்!

சென்னை: விஷால், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

டைம் ட்ராவல் பின்னணியில் ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ட்ரெய்லரில் அமர்க்களப்படுத்திய மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி உரிமை பல கோடிகளுக்கு விலை போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Mark Antony: Amazon Prime has acquired Vishals Mark Antony OTT rights

கோடிகளில் விலைபோன மார்க் ஆண்டனி ஓடிடி ரைட்ஸ்: விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் நேற்று வெளியான மார்க் ஆண்டனி ட்ரெய்லர் தான் என சொல்லப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எந்த படங்களும் எதிர்பார்த்தளவில் ஹிட் கொடுக்கவில்லை. இதனால் மார்க் ஆண்டனி படம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விஷால், எஸ்ஜே சூர்யா காம்போவில் அதகளமான காமெடி ஜானரில் மார்க் ஆண்டனி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து, ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடியில் மாஸ் காட்டியுள்ளது இந்த ட்ரெய்லர்.

எஸ்ஜே சூர்யா பேசிய "கேங்ஸ்டர்ன்னா டிசிப்ளின் வேணும்... பொம்பள சோக்கு கேக்குதாடா பொம்பள சோக்கு" என்ற வசனமும், சில்க் ஸ்மிதா வரும் காட்சிகளும் ட்ரெய்லரை வேற லெவலில் கொண்டு சென்றுள்ளது. அதேபோல், மார்க் ஆண்டனி ட்ரெய்லர் முழுவதும் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி என அனைவரும் நடிப்பில் அசுரத்தனம் செய்துள்ளனர்.

முக்கியமாக மார்க் ஆண்டனி ட்ரெய்லரின் தொடக்கத்தில் கைதி ஹீரோ கார்த்தியின் டில்லி கேரக்டர் மூலம் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளது இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வரும் 15ம் தேதி சந்திரமுகி 2 படத்துடன் மோதவிருக்கும் மார்க் ஆண்டனிக்கு திடீரென ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரமுகி 2-க்கு மார்க் ஆண்டனி செம்ம டஃப் கொடுக்கும் எனத் தெரிகிறது.

மார்க் ஆண்டனி ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால், இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில், அமேசான் ப்ரைம் மார்க் ஆண்டனியை தட்டித் தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பல கோடிகளில் பிஸினஸ் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X