Mask OTT: ஓடிடியில் வெளியாகும் கவினின் மாஸ்க்.. எந்த தளத்தில் எப்போது தெரியுமா?
சென்னை: விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம்'மாஸ்க'. கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கவின், அந்த படத்தை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் முடிந்த பின் கவின் நடித்த லிப்ட் திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாக நல்ல விமர்சனத்தை பெற்றது. அதன் பின், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வந்த கவின் நடித்த 'பிளடி பெக்கர்' படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அந்த படத்தை தொடர்ந்து கவின் நடத்த "மாஸ்க்" படம் கடந்த மாதம் 21ந் தேதி வெளியானது.

மாஸ்க்: அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்க ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருந்தார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின்கதை
என்னவென்றால், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 446 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. எப்படியாவது சம்பாதித்து பெரிய ஆளாகி விட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் பிரைவேட் நிறுவனத்தில் டிடெக்டிவாக இருக்கிறார் படத்தின் நாயகன் கவின். சமூக சேவையாக ஆண்ட்ரியாக இருக்கிறார். சிஎம் நாற்காலிக்கு ஆசைப்படுகிறார் பவன்.இவர்கள் அனைவரும் சேர்ந்து சூப்பர் மார்கெட்டில் கொள்ளை அடித்த பணத்தை தேடுகின்றனர். 446 கோடி பணம் சூப்பர் மார்க்கெட்டிற்குள் ஏன் வந்தது? அந்த பணத்தை கொள்ளை அடித்தது யார்? என்பது தான் படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ்: இத்திரைப்படத்தின் திரையரங்க வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஓடிடி ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 'மாஸ்க்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, மாஸ்க் வருகிற 9-ம் தேதி முதல் ஜீ5-ம் ஸ்டிரீமிங் ஆக உள்ளது. திரையரங்குகளில் படம் பார்க்க தவறியவர்கள் மற்றும் மறுபடியும் பார்க்க விரும்பும் ரசிகர்கள், ஓடிடி வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, திரில்லர் வகை படங்களை விரும்பும் ரசிகர்களிடையே 'மாஸ்க்' திரைப்படம் ஓடிடியில் புதிய கவனம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











