தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன.. இதோ லிஸ்ட்!

சென்னை: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய மாமன் படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா லெட்சுமி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். மாமன் உறவை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் மே16ந் தேதி தியேட்டரில் வெளியாகி, இதுநாள் வரை ரூ.25 கோடியை வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து மே 23ந் தேதி விஜய்சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் வெளியானது. ஆனால், இந்த படத்தில் கதை இல்லாததால், படம் தோல்வி அடைந்தது. தியேட்டரில் தற்போது வரை மாமன் திரைப்படம் தான் ஓடி வருகிறது. இந்த செய்தியில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாக உள்ள படம் என்னென்ன என்று பார்க்கலாம்.

டி ஆர் பாலா இயக்கத்தில் பிக் பாஸ் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடித்துள்ள படம் தான் 'ஜின்'. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'ஜின்' திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க, அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படம் வரும் 30ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

Retro OTT

ஆண்டவன்: வில்லியம் பிரதர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வி.வில்லி திருக்கண்ணன் இயக்கத்தில், கே.பாக்யராஜ்,டிஜிட்டல் மகேஷ் லீட்ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் 'ஆண்டவன்'. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மே 16 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதையடுத்து இப்படம் வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது. இவை மட்டுமில்லாமல் மனிதர்கள்,கராத்தே கிட், தி வெர்டிக்ட் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

Retro OTT

ரெட்ரோ: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி தியேட்டரில வெளியான படம் 'ரெட்ரோ'. அதிரடியாக கேங்ஸ்டர் திரைப்படமான இப்படத்தில் சூர்யா மிரட்டி இருந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றது. இப்படம் 18 நாளில் 235 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படம் மே 31ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என உள்ளது.

துடரும்: எம்புரான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப். 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'துடரும்'. இதில், மோகன்லால், ஷோபனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் தொடர்ந்து தியேட்டரில் ஓடி வருவதால், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகும் என சொல்லப்பட்டது. ஆனால், இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற மே 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

ஹிட் 3: பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கிய, 'ஹிட் 3' படத்தில், நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீனிபாஸ், ரவி மரியா, ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். கிரிமினல் ஜானரில் உருவான இப்படத்தில் நானி போலீஸ் அதிகாரி ரோலில் நடித்துள்ளார். பிரசாந்தி திபிர்னேனி மற்றும் நானி இருவரும் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். தியேட்டரில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.120 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் மே 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Read more about: retro ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X