வில்லியாக மிரட்டிய மீனா? மகளை கொல்ல நினைப்பது ஏன்? சீக்ரெட் ஸ்டோரீஸ் : ரோஸ்லின் விமர்சனம்!
சென்னை: 'பாபநாசம்' பட புகழ் ஜீத்து ஜோசப்பின் தயாரிப்பில், பாடலாசிரியர் விநாயக் சசிகுமாரின் திரைக்கதையில், சுமேஷ் நந்தகுமாரின் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் 'சீக்ரெட் ஸ்டோரீஸ் : ரோஸ்லின்'. அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் கதை பாணியில் உருவாகி இருக்கும் இந்த தொடர் 27ந் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. மொத்தம் 6 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் மீனா, வீனித், சஞ்சனா, சிஜா ரோஸ், ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் நடித்துள்ளனர்.
அதிரடியாக பல திருப்பங்கள் கொண்ட இந்த 'சீக்ரெட் ஸ்டோரீஸ் : ரோஸ்லின்' வெப் தொடரில் முதன் முறையாக நடிகை மீனா நெகட்டிவ் ரோலில் வில்லியாக நடித்துள்ளார். அழகான கண்ணழகி கதாநாயகியாக பார்த்து பழகிய நமக்கு புதுவிதமான அனுபவத்தை நடிகை மீனா கொடுத்து இருக்கிறார். ஹோபா என்ற ரோலில் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார். அழகான ஒரு வீட்டில் நாயகி ரோஸ்லின் (சஞ்சனா தீபு) அம்மா மீனா, அப்பா வீனித்,ஒரு தம்பி என நான்கு பேர் வாழ்ந்து வருகின்றனர்.

சீக்ரெட் ஸ்டோரீஸ் : ரோஸ்லின்: ரோஸ்லினுக்கு தினமும் காலையில் வரும் கனவில், கருப்பு உடையில், பூனைக்கண் கொண்ட ஒருவன், தன்னையும் தன் குடும்பத்தையும் கொலை செய்வது போல தொடர்ந்து கனவு வருகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ரோஸ்லின் உள்ளாகிறாள். இதைபற்றி அம்மா (மீனா)விடம் சொன்னாலும், நீ தொடர்ந்து இரவு மர்மமான புத்தகத்தை படிப்பதால் வரும் கனவு, அதுபோன்ற புத்தகத்தை படிக்காதே என அலட்சியம் செய்கிறாள். ஆனால், தொடர்ந்து, அந்த பூனை கண்கொண்ட நபர் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்து ரோஸ்லின் பயப்படுகிறார்.
வில்லியாக மிரட்டிய மீனா: இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருக்க, தன் கனவில் வரும் அதே பூனை கண் கொண்ட நபர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்து தங்குகிறார். அவனை பார்த்து பயப்படும் ரோஸ்லின், அவன் தான், நான் தினமும் கனவில் பார்க்கும் மர்ம நபர், அவன் நம்மை கொல்ல வந்து இருக்கும் கொலைகாரன் என்று சொல்லியும் மீனா, அப்பா (வீனித்) யாரும் நம்பவில்லை. இதனால், ரோஸ்லின் வீட்டிற்கு வந்து இருக்கும் பூனைக்கண் கொண்ட (ஹக்கீம் ஷாஜகான்) வீட்டில் இருந்த விரட்ட பல திட்டங்களை போட்டு அவனை எப்படியோ வீட்டில் இருந்து விரட்டி விடுகிறாள்.
சுவாரசியமான கதை: இதையடுத்து ரோஸ்லிலினின் 18வது பிறந்த நாள் வருகிறது. அந்த பிறந்த நாளை மீனா,வினீத் என அனைவரும் சிறப்பாக கொண்டாடிவிட்டு தூங்குகின்றனர். அப்போது ரோஸ்லின் கனவில் வந்த சம்பவம் போலவே கருப்பு உடையில் பூனை கண் கொண்ட (ஹக்கீம் ஷாஜகான்) வீட்டில் நிற்பதை பார்த்து பயந்து அலறி, அம்மா, அப்பாவின் அறைக்கு ஓடுகிறாள். ரோஸ்லின் பயந்து வருவதை பார்த்த வீனித் அந்த பூனை கண் கொண்ட (ஹக்கீம் ஷாஜகான்) கட்டையால் தாக்க அவன் மயங்கி விழுகிறான்.

மகளை கொல்ல நினைப்பது ஏன்: இதையடுத்து, அம்மா என பயத்தோடு மீனாவை நோக்கி ஓடிவந்து ரோஸ்லின் கட்டிப்பிடிக்க, மீனாவும், வீனித்தும் சேர்ந்து கொண்டு ரோஸ்லினின் கழுத்தைப்பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர். இவர்களிடம் இருந்து எப்படி ரோஸ்லின் தப்பித்தாளா? மகள் ரோஸ்லினை மீனா, வீனித் ஏன் கொல்ல துடிக்கின்றனர்? கொல்வதற்கான காரணம் என்ன? வீட்டிற்கு வந்த அந்த பூனை கண் நபர் யார் என்ற பல அதிரடியான திருப்பங்கள் தான் 'சீக்ரெட் ஸ்டோரீஸ் : ரோஸ்லின்' வெப் தொடரின் கதை. அடுத்தடுத்த திருப்பங்களுடன் ஒவ்வொரு எபிசோடும் அமைந்துள்ளது. கதையின் நாயகியாக நடித்து இருக்கும் சஞ்சனா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதே போல மீனா, வினித் இவர்களின் நடிப்பும் சூப்பர். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











