Merry Christmas - விஜய் சேதுபதி நடித்த ஹிந்தி படம்.. 60 கோடி கொடுத்து வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்

சென்னை: மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் தோன்றிய அவர் தீவிரமாக முயற்சித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 2012லிருந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் விஜய் சேதுபதி கரியரின் உச்சத்தில் இருந்த சமயம். அந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும் என வரிசையாக அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

Merry Christmas Movie OTT Rights Sold at 60 Crores Rupees

முன்னணி ஹீரோ: அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி நட்புகளுக்காக சில படங்களில் நடித்தார், தயாரிக்கவும் செய்தார். அதனால் அவருக்கு பொருளாதார ரீதியாக கொஞ்சம் அடி விழுந்ததாகவும் அப்போது பேச்சு எழுந்தது. அதனையடுத்து அவர் நடித்த படங்கள் கொஞ்சம் சறுக்க செய்தன. இருப்பினும் அவருக்கென்று ரசிகரக்ள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஹிந்தி சென்ற விஜய் சேதுபதி: ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லன் ரோலையும் செய்தார். தொடர்ந்து அந்த ரோல்களிலும் தனது முத்திரையை பதித்துவிட்டு ஹிந்திக்கு சென்றார். அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். குறிப்பாக தனது சொந்த குரலிலேயே ஹிந்தியில் டப்பிங் பேசியும் அசத்தினார்.

Merry Christmas Movie OTT Rights Sold at 60 Crores Rupees

மெர்ரி கிறிஸ்துமஸ்: இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸில் கமிட்டாவதற்கு முன்னதாகவே மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற ஹிந்தி படத்தில் கமிட்டானார் விஜய் சேதுபதி. ஶ்ரீராம் ராகவன் படத்தை இயக்கியுள்ள படத்தில் கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஃபர்ஸ் வெப் சீரிஸ் போலவே இந்தப் படமும் விஜய் சேதுபதிக்கு பெயர் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படமானது டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

60 கோடி ரூபாய்: இந்நிலையில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் சாட்டிலைட் உரிமமும் பெரிய தொகைக்கு விற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X