விஜய் சேதுபதி ஃபேன்ஸ் ரெடியா.. மெரி கிறிஸ்துமஸ் ஓடிடி ரிலீஸ் எப்போ, எதில் தெரியுமா?
சென்னை: சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் தோன்றியவர் விஜய் சேதுபதி. பிறகு முட்டி மோதி ஹீரோவாகும் வாய்ப்புகளை பெற்ற அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அதன் காரணமாக டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவர் தற்போது மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார்.
விஜய் சேதுபதி கோலிவுட்டில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தவர். புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிக்கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் சீனு ராமசாமி ஹீரோ வாய்ப்பை கொடுத்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. மேலும் தேசிய விருதையும் பெற்றது. இதன் காரணமாக விஜய் சேதுபதியும் அடையாளப்பட்டார். எனவே அவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

தொடர்ந்து ஹிட்டுகள்: நாளைய இயக்குநர் செட் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நேரம் அது. அதன்படி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், பீட்சா, சூதுகவ்வும் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார் சேதுபதி. முக்கியமாக ஒவ்வொரு படத்துக்கும் தனது வெரைட்டியை காண்பித்ததால் இவருக்கு லக் மட்டுமில்லை திறமையும் இருக்கிறது என்பதை கோலிவுட் உணர்ந்துகொண்டது. இதனால் வேறு இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் விஜய் சேதுபதியை தொடர்ந்து படங்களில் புக் செய்தனர்.
ஹீரோ மட்டுமில்லை: ஹீரோவாக மட்டுமே நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஒருகட்டத்தில் ஸ்கோப் இருந்தால் வில்லனாகவும் நடிக்கலாம் என்று முடிவெடுத்து வில்லனாகவும் நடித்தார். அதன்படி மாஸ்டர், விக்ரம், பேட்ட போன்ற படங்களில் அவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. அதேசமயம் அவர் வில்லனாக மட்டுமே நடிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. இதற்கிடையே அவர் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார். அதன்படி ஃபர்ஸி வெப் சீரிஸில் நடித்த விஜய் சேதுபதி ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார்.
இனி ஹீரோதான்: ஃபர்ஸி மற்றும் ஜவானுக்கு முன்னதாகவே மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கமிட்டாகிவிட்டார். அதில் கத்ரீனா கைஃப் ஹீரோயினாக நடித்திருந்தார். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்த அந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு நல்ல வரவேற்பையே கொடுத்தனர். முக்கியமாக கத்ரீனா கைஃப் - விஜய் சேதுபதி இடையே கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்ததாக கூறினார்கள்.
ஓடிடி ரிலீஸ் தேதி: பார்ப்பதற்கு ஃபீல் குட் படமாக இருந்த மெரி கிறிஸ்துமஸ் விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. அதன்படி மார்ச் எட்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியானபோது படத்தை பார்க்க முடியாதவர்கள் ஓடிடியில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் போலவே ஓடிடி தளத்திலும் கண்டிப்பாக நல்ல ரெஸ்பான்ஸை படம் பெறும் என்று விஜய் சேதுபதி ரசிகர்களும், படக்குழுவினரும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











