சொர்க்கம் மதுவிலே.. சொக்கும் அழகிலே.. உலகத்திலேயே இப்படியொரு பார்ட்டியை பார்த்திருக்க மாட்டீங்க!

பெர்லின்: இந்தியாவில் பார்ட்டி என்றாலே பலருக்கும் கோவா தான் நினைவுக்கு வரும். ஆனால், உலகத்திலேயே பார்ட்டியை குதூகலமாகவும் வேறலெவலிலும் கொண்டாடும் நாடு என்றால் அது ஜெர்மனி தான் என்றும் அங்கே உள்ள பெர்லின் நகர் தான் பார்ட்டியின் சொர்க்க பூமி என ரிஸ்க் பிசினஸ் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியின் 4வது எபிசோடில்
கொரியாவின் பிரபல காமெடி நடிகர்களான ஷின் டோங்-யுப் மற்றும் சுங் சி-க்யுங் காண்பித்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வெப்ஷோ ஒன்று ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த மாதம் தான் புதிதாக வெளியான அந்த வெப்ஷோவை பல ரசிகர்கள் பார்த்து பிரம்மித்து வருகின்றனர்.

Midnight Party culture explored in Risqué Business -The Netherlands and Germany web series Episode 4

ஆபாசமான விஷயங்கள் என பல நாடுகளில் ஒதுக்கப்படும் பாலியல் சம்மந்தமான விஷயங்களில் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள மக்களின் பார்வை எப்படி இருக்கிறது. எவ்வளவு ஓபன் மைண்டாக அவர்கள் உள்ளனர் என வெளிச்சம் போட்டு காட்டி பல Tabooக்களை உடைத்து வருகின்றனர்.

எது சரி, எது தவறு: வெஜ் சாப்பிடுறவங்களுக்கு நான் வெஜ் சாப்பிடுறவங்க செய்யுறது எல்லாமே தவறு தான். வெஜ் நல்லது தான். ஆனால், எனக்குத்தான் வாயில வச்சாலே வாந்தி வரும் என நான் வெஜ்ல ஓடுறது பறக்குறது, தாவுறது என அனைத்து ஐட்டங்களையும் வெளுத்துக் கட்டும் ஒரு கும்பலே உள்ளனர். சிலர் கிழமை பார்த்து நான் வெஜ் சாப்பிடுவதும் உண்டு. ராட்சசன் படத்தில் சைவமா? அசைவமா? என விவாதத்தையே பாடல் வரிகளாக வைத்திருப்பார்கள். பெர்லின் மக்கள் பாலியல் விஷயத்தில் டோட்டல் அசைவப் பிரியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். நம்ம ஊரில் எதெல்லாம் தவறு என்று பார்க்கப்படுகிறதோ அங்கே அதெல்லாம் சரி என்று கருதப்பட்டு அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

4வது எபிசோடில் பப்பும் பார்ட்டியும் தான்: "சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே" என பாடலை போட்டு செம டான்ஸ் போடலாம் போல அந்தளவுக்கு பெர்லின் நகரம் சரியான மிட் நைட் பார்ட்டி நகரமாக ஜொலிக்கிறது. அந்த பார்ட்டிக்கு செல்ல நார்மலாக டிரெஸ் பண்ணிக் கொண்டு போனால் கூட பவுன்சர்கள் வெளியே போடா அமுல் பேபி என அனுப்பி விடுகின்றனர். அந்த கொரிய காமெடியன்கள் இருவருக்கும் செம அட்வைஸ் கொடுத்து எப்படி ஆடையே அணியாதது போல ஆடை அணிந்துக் கொண்டு பார்ட்டிக்கு செல்வது என்பதை விளக்கும் அந்த கல்லூரி மாணவியின் கைடு 4வது எபிசோடில் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது.

Midnight Party culture explored in Risqué Business -The Netherlands and Germany web series Episode 4

ஸ்டெப்ஸ் முக்கியமில்லை: பார்ட்டி மற்றும் பப்களில் ஆடும் போது ஸ்டெப் போட்டு சரியாக ஆடவேண்டும் என்பது முக்கியமல்ல என்றும் மடை திறந்து தாவும் நதி அலை போல சந்தோஷமாக துள்ளிக் குதித்தாலே போதும் என்பதை பெர்லின் மக்கள் எப்படி செய்கின்றனர் என்பதையும் விளக்கும் விதம் அந்த எபிசோடின் ஹைலைட்.

ரெஸ்ட்ரூம் போக அப்படியொரு க்யூ: கிளப், பார்ட்டிக்கு செல்பவர்கள் படுமோசமான ஆடைகளையும், உடல் பாகங்கள் தெரியும்படியான ஆடைகளை அணிந்து செல்கின்றனர். மேலும், அங்கே ஒரு பெரிய லைனில் மக்கள் காத்திருக்க காரணமே அங்கே உள்ள ரெஸ்ட்ரூம் யூனிசெக்ஸ் என்பது தான். அதற்குள் ஜோடி ஜோடியாக சென்று என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதையும் வெளிச்சம் போட்டு இந்த வெப்சீரிஸ் காட்டிவிட்டது. அடுத்த எபிசோடு இதை விட படு பயங்கர்மாக செக்ஸ் டாய்ஸ் பற்றிய எபிசோடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X