MinnalMurali: OTT ரசிகர்களின் ஃபேவரைட் மின்னல் முரளி... 2ம் பாகத்துக்கு கண்டிஷன் போட்ட டொவினோ தாமஸ்
திருவனந்தபுரம்: டொவினோ தாமஸ் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்னல் முரளி.
பாசில் ஜோசப் இயக்கிய இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற மின்னல் முரளி படத்தின் 2ம் பாகம் எடுக்க டொவினோ தாமஸ் ரெடியாகிவிட்டாராம்.
ஆனால், மின்னல் முரளி 2ம் பாகத்துக்காக அவர் கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் மின்னல் முரளி 2: மலையாள முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் 2018 என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. மினிமம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில், மின்னல் முரளி திரைப்படம் குறித்து நடிகர் டொவினோ தாமஸ் அப்டேட் கொடுத்துள்ளார். டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடிப்பில் 2021ம் ஆண்டு மின்னல் முரளி திரைப்படம் வெளியானது.
பாசில் ஜோசப் இயக்கிய இந்தப் படம் சூப்பர் மேன் கான்செப்ட்டில் உருவாகியிருந்தது. மேக்கிங்கில் மிரட்டிய மின்னல் முரளி படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என படக்குழு பிடிவாதமாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது மின்னல் முரளி. இந்தப் படம் ஓடிடி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பலரும் மின்னல் முரளி படத்தை கொண்டாடினார்கள். இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனை மின்னல் முரளி ஹீரோ டொவினோ தாமஸ் உறுதி செய்துள்ளார். மேலும், மின்னல் முரளி இரண்டாம் பாகத்தை தியேட்டரில் மட்டும் தான் ரிலீஸாகும். இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

அதேபோல், தியேட்டருக்கு பிந்தைய ஓடிடி ரைட்ஸ் நெட்பிளிக்ஸ்க்கு தான் வழங்கப்படும் எனவும் டொவினோ தாமஸ் கூறியுள்ளார். இதனால் மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவுள்ளதாம். இது உறுதியானால் அடுத்தாண்டு மின்னல் முரளி 2ம் பாகம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மின்னல் முரளி முதல் பாகத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் இருவருக்கும் மின்னல் பாதிப்பால் சூப்பர் பவர் கிடைக்கும். அதன்பின்னர் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் மொத்த கதையும். சூப்பர் மேன்களுக்கான மரபுகளை உடைத்து செம்ம சிம்பிளாக உருவான இந்தப் படம், அட்வென்சர் பட ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது. இதனால், மின்னல் முரளி இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு இப்போது தாறுமாறாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











