5 Best Spanish Thriller Movies list in Tamil: எல்லாமே தரமான சம்பவம்.. டாப் 5 ஸ்பானிஷ் படங்கள்!
சென்னை: ஹாலிவுட் படங்களுமே பார்த்து போரடித்து விட்டதா ஓடிடியில் நீங்கள் பார்த்து ரசிக்க ஏராளமான பிற மொழி சூப்பர் ஹிட் படங்களும் உள்ளன.
ஸ்பானிஷ் படங்கள் என்றாலும் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டும் சப் டைட்டில் இடம்பெற்றும் பிரபல ஓடிடி பிளாட்ஃபார்ம்களில் கிடைக்கின்றன.
உலகளவில் சினிமா ரசிகர்களை உறைய வைத்த டாப் 5 த்ரில்லிங்கான ஸ்பானிஷ் படங்கள் என்ன என்ன என்பது குறித்தும் எந்த ஓடிடியில் அவற்றை பார்க்கலாம் என்றும் இங்கே காணலாம்..
தி ஸ்கின் ஐ லிவ் இன் (The Skin I Live In):
ஸோரோவாக நடித்து ஹாலிவுட் படங்களை பார்க்க வைத்த அன்டோனியோ பெண்டரஸ் நடிப்பில் இப்படிக் கூட ஒரு படத்தை இயக்க முடியுமா என திகிலூட்ட வைத்த த்ரில்லர் படம் தான் தி ஸ்கின் ஐ லிவ் இன். 2011ம் ஆண்டு இயக்குநர் பெட்ரோ ஆல்மோடோவர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனது மகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த ஒரு இளைஞனை கடத்தி வந்து பெண்ணாக மாற்றி கொடுமைப்படுத்தும் கொடூரனாக ஆண்டோனியோ பெண்டரஸ் நடித்திருப்பார். அடல்ட் கன்டென்ட்கள் நிறைந்த இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

மிரேஜ் (Mirage):
இயக்குநர் ஒரியல் பாலோ இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான செமையான த்ரில்லர் ஸ்பானிஷ் படம் தான் மிரேஜ். மணி ஹெயிஸ்ட் படத்தில் புரொபஸராக நடித்து கலக்கிய அதே அல்வரோ மார்ட்டே நடித்துள்ள படம் தான் இந்த மிரேஜ். அவருடன் இணைந்து ஸ்பானிஷ் நடிகை அட்ரியனா உகார்டேவும் வெளுத்து வாங்கி இருப்பார். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்த படத்தை பார்த்து மெர்சல் அடையலாம்.

தி கார்ப்ஸ் ஆஃப் அனா ஃப்ரிட்ஸ் (The Corpse of Anna Fritz):
2015ம் ஆண்டு இயக்குநர் ஹெக்டர் ஹெர்மண்டேஸ் இயக்கத்தில் வெளியான இந்த திகிலூட்டும் த்ரில்லர் படம் ஓடிடி ரசிகர்களின் ஒன் ஆஃப் தி ஃபேவரைட் படமாகவே மாறி உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படத்தில் நடிகை ஆல்பா ரிபாஸ் அன்னா ஃப்ரிட்ஸாக நடித்திருப்பார். பிரபல நடிகை ஒருவர் இறந்து போக அவரது உடல் மார்ச்சுவரிக்கு பிரேத பரிசோதனைக்காக வருகிறது. நிர்வாணமாக பிரபல நடிகையின் உடலை பார்த்த அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர் அதன் உடன் இணைந்து செல்ஃபி எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்புவார். உடனடியாக அந்த நடிகையின் நிர்வாண உடலை காண வரும் நண்பர்கள் இறந்து போன உடலையும் விடாது செக்ஸ் வைக்க முயல்வார்கள். அப்போது திடீரென அந்த அனா பாடி கண் திறந்து பார்க்க ஒட்டுமொத்த பேரும் அலறிவிடுவார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ட்விஸ்ட்டே!

எல் க்யுவர்போ (El Cuerpo):
மிரேஜ் படத்தை இயக்கிய இயக்குநர் ஒரியல் பாலோ இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான எல் க்யுவர்போ அதாவது ஆங்கிலத்தில் தி பாடி என மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த படமும் பயங்கரமான த்ரில்லர் வகையறா படம் தான். அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களில் இந்த படம் கிடைக்கிறது.

தி இன்விசிபிள் கெஸ்ட் (The Invisible Guest):
2016ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான தி இன்விசிபிள் கெஸ்ட் படத்தையும் இயக்குநர் ஒரியல் பாலோ தான் இயக்கி உள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் திகிலூட்டும் த்ரில்லர் வகையறா படங்கள் தான். இந்த வாரம் ஓடிடியில் இந்த படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.. நிச்சயம் எந்த படமும் உங்களை பெரிதாக சோதிக்காது!



Click it and Unblock the Notifications











