சன்னி லியோனின் டேட்டிங் ஷோ பாதி கிணறை தாண்டிடுச்சு.. குறும்படத்தை போட்டு குட்டையை குழப்பிய உர்ஃபி!

மும்பை: எம் டிவி ஸ்ப்ளிட்ஸ் வில்லா எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் சீசன் 15ன் புதிய எபிசோடில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகை சன்னி லியோன் திடீரென லவ் குருவாக மாறி காதல் குறித்த புரிதலை போட்டியாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார். காதல் என்பது 50 - 50 மாதிரி இரு தரப்பிலும் சரியான அன்பு வெளிப்பட்டால் மட்டுமே காதல் நிலைக்கும், நீடிக்கும் என்று பாடம் நடத்தினார்.

மறுமுனையில் வீட்டில் பெரிய குண்டை தூக்கிப் போட்டு குறும்புக்காரியான உர்ஃபி ஜாவேத் அழகாய் சென்றுக் கொண்டிருந்த ஹர்ஷ் மற்றும் ருஷாலி வாழ்வில் புயலை கிளப்பினார். தனியாக காதல் குகைக்குள் ஹர்ஷை மட்டும் அனுப்பியிருந்தனர். அங்கே திடீரென வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த முன்னாள் காதலி சுபியை பார்த்ததும் கட்டிப் பிடித்து உணர்ச்சி வசப்பட்ட ஹர்ஷ் அதன் பின்னர் தற்போது தான் ருஷாலியை தான் காதலிக்கிறேன் என்று சொல்லி தவிர்த்த நிலையில், அழகாக அவர் சுபியை காதல் குகைக்குள் கட்டிப் பிடித்த காட்சிகளை மட்டும் வெளியிட்டு ருஷாலியை பத்ரகாளியாக மாற்றி விட்டார்.

ott television sunny leone urfi javed Splitsvilla X5

உர்ஃபி போட்ட குறும்படம்: இதெல்லாம் என்ன? எப்படி எனக்கு துரோகம் செய்ய உனக்கு மனம் வந்தது என கடுப்பாகி கத்த ஆரம்பித்து விட்டார் ருஷாலி. அவருக்கு துணையாக காஷிஷ் நின்று ஹர்ஷ் செய்தது அநியாயம் என வாதிட்டார். ஹர்ஷுக்கு ஒரே ஒரு உறுதுணையாக சச்சின் மட்டுமே அவர் பக்கம் நின்றார். சுபி உள்ளே வந்ததில் இருந்தே ஹர்ஷ் எங்கே அவர் பக்கம் தாவி விடுவாரோ என்கிற பயத்துடனே இருந்த ருஷாலிக்கு சுபியுடன் லவ் டென்னில் ஹர்ஷ் கட்டிப் பிடித்து இருந்ததை பார்த்து கடுப்பாகி விட்டார். உர்ஃபி ஜாவேத் நினைத்தது போல தனது வேலையை காட்ட வில்லாவே ரெண்டாகி விட்டது. ஹர்ஷ் தனக்கும் சுபிக்கும் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் தான் ருஷாலியை தான் உண்மையாக காதலிக்கிறேன் என சொல்ல எவ்வளவு போராடியும் எதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை.

இன்னொரு புறம் சிவெட் செய்யும் காரியங்களால் கடுப்பாகி அனிகா அப்செட் ஆகிவிட்டார். அதே நேரத்தில் ஜஷ்வந்த் உடன் அக்ரிதி கடுமையான சண்டை போட காதல் பொங்கி வழிங்க ஸ்ப்ளிட்ஸ் வில்லாவில் திடீரென சண்டைக்காடாக காட்சிகள் மாறின. இதற்கு நடுவே ஆதிக் மற்றும் கானக் இருவரும் ஒன்றாக இணைந்ததை நடிகை சன்னி லியோன் நோட் செய்தார். சச்சின் எப்படி டபுள் கேம் ஆடுகிறார் என இஷிதா தோலுரித்துக் காட்டத் தொடங்கினார். சச்சினோட எக்ஸ் ஸ்குயிஸான ஸ்வாஸ்திகாவுடன் அவர் பழகிக் கொண்டே தன்னை காதலிப்பது போல நாடகம் ஆடுகிறார் என்பதை அம்பலப்படுத்தினார்.

ஏகப்பட்ட பிரச்சனை: வெற்றி ஜோடியான அர்பாஸ் கான் மற்றும் காஷிஷுக்கு புதிய போட்டி ஒன்று வைக்கப்பட்டது. அந்த போட்டியில் ஏகப்பட்ட தடைகளும் ட்விஸ்ட்டுகளும் கொடுக்கப்பட்டன. 'Long Ride Pe Chal,' எனும் அந்த போட்டியில் இருவரும் எதிர் எதிர் அணியில் மோதினர். அர்பாஸ், நயேரா மற்றும் ஹர்ஷ் மூவரும் அந்த போட்டியில் வெற்றிப் பெற்றனர். சிவெட்டின் அணி மோசமாக விளையாடி தோல்வியை தழுவிய நிலையில், தங்கள் தோல்விக்கு அர்பாஸ் தான் காரணம் என சிவெட் மற்றும் அர்பாஸ் இடையே திடீரென மோதலும் வெடித்தது.

சன்னி லியோன் காதல் தத்துவம்: ஆட்டத்தின் அடுத்த கட்டமான டோம் செஷனில் ஆரக்கிளை எந்த ஜோடி சந்தித்து சிறந்த ஜோடியாக தேர்வாகிறது என்று பார்க்கும் கட்டம் வந்தது. ஹர்ஷ் எப்படியாவது சிறந்த ஜோடியாக தன்னையும் ருஷாலியையும் நிரூபிக்க போராடினார். ஆனால், அது நிறைவேறவில்லை. சன்னி லியோன் பேசும் போது காதல் என்பது 50 - 50 ஆக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது காதல் இல்லை என்றும் நானும் என் கணவரும் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறோம் என்றார். இறுதியில் சிறந்த ஜோடியாக இந்த வாரம் நயேரா மற்றும் திக் விஜய் தேர்வானார்கள். ரூரு மற்றும் அமேஹா ஜோடியினர் இந்த வாரம் எலிமினேட் ஆகி அனைவருக்கும் பிரியா விடை சொல்லி விட்டு வெளியேறினர்.

ஸ்ப்ளிட்ஸ் வில்லா சீசன் 15 முதல் பாதியை வெற்றிகரமாக முடித்துள்ளது என்றும் இனிமேல் தான் ரியல் ஆட்டமே ஆரம்பம் என ஸ்பிளிட்ஸ் வில்லா போட்டியாளர்களை எச்சரிக்கும் தொனியில் தனுஜ் பேசினார். பயங்கரமான போட்டிகளும், ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளும் அரங்கேறப் போவதாகவும் போட்டியாளர்கள் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எம் டிவி தமிழ் மற்றும் ஜியோ டிவியில் தமிழில் இந்த ரியாலிட்டி ஷோ இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X