காதலர்களுக்குள் குட்டையை குழப்பிய உர்ஃபி ஜாவேத்.. சன்னி லியோன் ரியாலிட்டி ஷோவில் அனல் தெறிக்குது!
சென்னை: எம் டிவி மற்றும் ஜியோ டிவி ஓடிடி பிளாட்ஃபார்மில் சன்னி லியோன், தனுஜ் விர்வானி தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 15 ஒளிபரப்பாகி வருகிறது. அதன் லேட்டஸ்ட் எபிசோடில் வில்லாவில் ஜாலியாக டேட்டிங் செய்து கொண்டிருந்த காதலர்களுக்கு மத்தியில் கண்ணி வெடி வைத்து குட்டையை குழப்பி விட்டார் மிஸ்சீஃப் மேக்கரான உர்ஃபி ஜாவேத்.
இந்த ஷோவையே தலைகீழாக மாற்றுகிறேன் பாருங்கள் என சவால் விட்டு இந்த வாரம் நிகழ்ச்சிக்குள் அடியெடுத்து வைத்த உர்ஃபி ஜாவேத் காதலர்கள் மத்தியில் சண்டை வரும் அளவுக்கு ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுத்து நிகழ்ச்சியின் போக்கையே முற்றிலுமாக மாற்றி ரசிகர்களுக்கு தரமான என்டர்டெயின்மென்ட்டை கொடுத்துள்ளார்.

ஏற்கனவே உர்ஃபி ஜாவேத் கொடுத்த டாஸ்க்கில் ஹர்ஷை தனியாக காதல் குகைக்கு வரவழைத்து, ஸ்பிளிட்ஸ்வில்லன்களிடையே பிரச்சனையை கிளப்புவதாக அந்த போர்ஷன் செம ட்விஸ்ட்டாக அரங்கேறியது. ஹர்ஷின் முன்னாள் காதலியான சுபி, தனது காதலை புதுப்பிக்கும் முயற்சியில் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளே நுழைந்தார். சன்னி லியோனிடம் தனது காதலர் ஹர்ஷ் தனியாக லவ் டென்னுக்கு சென்றது பற்றி ருஷாலி வருத்தப்பட்டார்.
ஆனால், அதன் பின்னர் காதலி தான் முக்கியம் என ஹர்ஷ் சுபியை கழட்டி விட்டு ருஷாலியிடம் சேர்ந்தார். ஆனால், அவர்களுக்கு எதிராக வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் சதி வலையை பின்னிய நிலையில், நடன நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஸ்கோர் கிடைக்கவில்லை. ’லிட்’ ஜோடியாக தேர்வாகவில்லையே என்கிற வருத்தம் அவர்களுக்கு மத்தியில் தீயாக எரியத் தொடங்கியது. அதுதொடர்பான தனது அதிருப்தியையும் ஹர்ஷ் அனைவர் முன்னிலையிலும் வெளிப்படுத்தினார்.
எக்ஸ் காதலன் தனக்கு கிடைக்காத கோபத்தில் ஹர்ஷ் ருஷாலியுடன் சேர்ந்து சுற்றுவதை குறிக்கோளாக கொண்டிருப்பதால் ஆட்டத்தில் கோட்டை விட்டுட்டார் என சுபியும் முடிந்தவரை கொளுத்திப் போட வீடு பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியது. இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க சுபியின் புதிய காதல் கனெக்ஷன் குறித்து கேள்வி எழுப்பி தொகுப்பாளர் தனுஜ் இன்னொரு வெடிகுண்டை உருட்டி விட்டது அனைவரையும் மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அக்ரிதி மற்றும் சிவெட் இருவரும் சுபியுடன் புதிய காதலை கொண்டிருப்பது சச்சின் தான் என குற்றம்சாட்ட செய்ய ஆரம்பித்தனர். ஏற்கனவே இஷிதா மற்றும் சச்சின் இருவரும் காதலர்களாக வலம் வரும் நிலையில், இஷிதாவுக்கு துரோகம் செய்து விட்டு சச்சின் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த சுபியுடன் அதற்குள் எப்படி ஜோடி சேர்ந்தார் என்பதே பெரும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
இந்த விளையாட்டில் திக்விஜய் திடீரென மாஸ்டர் மைண்டாகவும் அதே நேரம் முதுகு குத்தியாகவும் மாறியது தெரிய வந்தது. அவர் தான் சுபி வைல்டு கார்டாக உள்ளே வரவும் கனாக் மற்றும் யுவராஜ் எலிமினேட் ஆகி வெளியேறவும் காரணம் என்பது தெரிய வர ஆட்டம் சூடு பிடித்தது. அக்ரிதி மற்றும் சச்சினின் கடந்த கால சர்ச்சைகள் இன்னொரு பக்கம் அரங்கேறின.
அடுத்த நாளில் குயின் ஆஃப் ஹார்ட்ஸ் மற்றும் கிங் ஆஃப் ஹார்ட்ஸிடம் இருந்து வில்லாவில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு மெசேஜ் வந்தது. உர்ஃபி ஜாவேத் மேலும், என்ன என்ன குழப்பங்களை போட்டிகள் மூலம் உருவாக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் அதில் இடம்பெற்றது. அதன் பேரில், பெண் போட்டியாளரான காஷிஷ் 3 ஆண்களின் கட்டழகை வர்ணிக்க வேண்டும் என்கிற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஜஷ்வந்தில் இருந்து காஷிஷ் ஆரம்பிக்க ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி இடையே பிரச்சனை வெடித்தது. அடுத்து அனிகா பேசும் போது, லக்ஷய் தான் புதிய கனெக்ஷனில் உள்ளார் என்றார். உடனே உர்ஃபி ஜாவேத் லக்ஷய்க்கு சுபி சரியான பொருத்தம் இல்லை என அவரை கன்வின்ஸ் பண்ண ஆரம்பித்தார்.
அடுத்து அர்பாஸிடம் உர்ஃபி நாயேரா உனக்கு சரியான ஜோடி இல்லை என்பதை அனைவர் முன்னிலையிலும் சொல்லிவிடு என பற்ற வைக்க வேறு யாராவது அர்பாஸுக்கு ஐடியல் மேட்ச் ஆக ஆகுறீங்களாக எனக் கேட்க, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாயேரா கண்ணீர் சிந்த ஆரம்பிக்க அங்கே ஒரே எமோஷனல் டிராமா அரங்கேறியது. கடைசியாக ஹர்ஷ் பேசும்போது, சிலரது தூண்டுதல் காரணமாக ஜஷ்வந்த, ஆடி மற்றும் சிவெத்துடன் சண்டை போட நேர்ந்தது என்றார். கடைசியாக இரவில் யார் வின்னர் யார் தோற்றார் என உர்ஃபி அறிவிக்க, அனைவரும் ஷாக் ஆகிட்டாங்க.. எம் டிவி மற்றும் ஜியோ டிவியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த ரியாலிட்டி ஷோவை பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











