தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா?.. ஓடிடியில் வருது ஜெயராம் - ஊர்வசியின் பரிமளா & கோ.. எப்போது தெரியுமா?
சென்னை: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி கூட்டணியில் கடந்த மாதம் வெளியான பரிமளா அண்ட் கோ திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக தயாராக உள்ளது. குடும்ப பின்னணியில் காமெடி, மர்மம், திரில்லர் என வித்தியாசமான திரைக்கதையில் உருவான இந்த படம், ஜூலை 10 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ஓடிடியில் படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தியேட்டரில் வெளியானபோது இந்த படம் விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆகவில்லை என்றாலும், படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்விப் படம் இல்லை என்பது மட்டும் உறுதி. படம் குறித்து பலரும் நேர்மறையான விமர்சனங்களைப் பகிர்ந்தனர். குறிப்பாக ஜெயராம் - ஊர்வசி கூட்டணியின் இயல்பான நடிப்பும், குடும்ப உணர்வுகளுடன் கலந்த மர்ம திரைக்கதையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது படத்திற்கு பெரும் பலம் சேர்த்தது.
படக்குழு: இந்த படத்தில் ஜெயராம், ஊர்வசியுடன் மிஸ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை பாண்டிராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிரதீப் இ. ராகவ் படத்திற்கு எடிட்டிக் வேலைகளைச் செய்துள்ளார் . இசையை ஃபாக்ஸ்ன் அமைத்துள்ளார். இந்த படம் லைகா புரொடக்ஷன்ஸ், பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் தமிழ் குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஓடிடி ரிலீஸை அறிவிக்கும் விதமாக ஜீ5 தரப்பும் ஒரு ஸ்பெஷல் ப்ரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் அந்த அறிவிப்பு வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தியேட்டரில் இந்த படத்தை தவறவிட்ட ரசிகர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தியேட்டரிக்கல் ரிலீஸில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications