மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம்.. ஓடிடியில் ரிலீஸ்?

சென்னை: மோகன் லால் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால். கை வசம் ஏராளமான படங்களை வைத்துள்ள நடிகர் மோகன் லால், பிஸியாக நடித்து வருகிறார்.

61 வயதான நடிகர் மோகன் லால் பிரியதர்ஷன் இயக்கத்தில் குத்துச்சண்டை குறித்து பேசும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஓய்வு பெற்ற குத்துச்சண்டை சாம்பியனாக நடிக்கிறார் மோகன் லால்.

பாக்ஸர் லுக்கில் மோகன் லால்

பாக்ஸர் லுக்கில் மோகன் லால்

இதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் நடிகர் மோகன் லால். மேலும் பாக்ஸிங் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் மோகன் லால் பாக்ஸர் லுக்கில் இருக்கும் போட்டோ வெளியானது. இதில் அதிக எடை குறைந்து காணப்பட்டார் மோகன் லால்.

அதிக படங்கள் கைவசம்

அதிக படங்கள் கைவசம்

இதனை தொடர்ந்து மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம், ஆராட்டு, ராம், பரோஸ்: கார்டியன் ஆஃப் டி காமாஸ் ட்ரெஷர், 12th man, புரோ டாடி, எல்2: எம்புரான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் மோகன் லால்.

மூன்றாவது முறையாக கூட்டணி

மூன்றாவது முறையாக கூட்டணி

இதில் 12th man படம் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகிறது. ஏற்கனவே ஜீத்து ஜோசப்புடன் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 என்ற இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ளார் மோகன் லால். இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

40 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு

40 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய 12th man படத்தின் படப்பிடிப்பு 40 நாட்களில் நிறைவடைந்துள்ளது. த்ரில்லர் படமான இப்படத்தை திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஆண்டனி பெரம்பாவூர் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளார்.

ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டம்

ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டம்

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி த்ரிஷ்யம் 2 படத்தை போலவே 12th man படத்தையும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X