மோகன்லால் ,பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் "ப்ரோ டாடி" ஓடிடியில் வெளியாகிறது?

சென்னை: மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர்கள் பிரித்விராஜ் இப்பொழுது இயக்குனராகவும் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார்.

மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் என்ற மெகாஹிட் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார்.

இப்பொழுது லூசிஃபர் கூட்டணி மீண்டும் இணைந்து ப்ரோ டாடி என்ற திரைப்படம் குறுகிய கால கட்டத்தில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ்

மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பிரித்விராஜ் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மொழி,நினைத்தாலே இனிக்கும், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றது. இப்போது முழுவீச்சில் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த பிரித்விராஜ் பல திரைப்படங்களை தனது சொந்த தயாரிப்பு மூலம் தயாரித்தும் வருகிறார்.

மீண்டும் லூசிஃபர் கூட்டணி இணைந்து

மீண்டும் லூசிஃபர் கூட்டணி இணைந்து

நடிகர்,தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களை எடுத்த பிரித்விராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். நடிகர் மோகன்லால் இந்த திரைப் படத்தில் ஹீரோவாக நடிக்க அரசியல் ஆக்சன் களத்தில் உருவான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. இயக்கிய முதல் திரைப்படம் வெற்றி பெற்ற சூழலில் மீண்டும் லூசிஃபர் கூட்டணி இணைந்து புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

ப்ரோ டாடி

ப்ரோ டாடி

லூசிஃபர் மலையாளத்தில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இப்பொழுது தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருகிறது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க தனிஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் பிரித்விராஜ் மோகன்லால் சூப்பர் ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்திற்கு ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன்

முதற்கட்டமாக இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு குறுகிய காலகட்டத்திலேயே படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. அதன்படி 44 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட்டு இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இவர்களுடன் மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ப்ரோ டாடி திரையரங்குகளில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X