நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் ப்ரோ டாடி ... ரிலீஸ் தேதி வெளியானது

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்

பிரித்திவிராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்ததை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது

மோகன்லால், பிரித்திவிராஜ் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள ப்ரோ டாடி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது அதன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில்

பிரம்மாண்ட பொருட்செலவில்

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் மோகன்லால் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரம் பெற்று வருகிறது சமீபத்தில் கூட மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் மரைக்காயர் அரபிக்கடலில் சிங்கம் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இங்கும் பெரும் வசூல் சாதனையை குவித்தது இவ்வாறு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வரும் மோகன்லால் தற்போது ப்ரோ டாடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

வசூல் சாதனை

வசூல் சாதனை

நடிகராக கலக்கிக் கொண்டிருந்த பிரித்திவிராஜ் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து திரைப்படம் லூசிபர். கடந்த 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது இதில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார் மேலும் மஞ்சு வாரியர்,டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த திரைப்படம் அரசியல் கலந்த திரில்லர் கதை களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்பொழுது லூசிபர் திரைப்படம் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது

ப்ரோ டாடி

ப்ரோ டாடி

இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே மிகச் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்த பிரித்திவிராஜ் இப்பொழுது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த முறையும் மோகன்லால் ஹீரோவாக நடிக்க இந்த படத்திற்கு ப்ரோ டாடி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கலகலப்பான குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் மோகன்லாலை தொடர்ந்து பிரித்திவிராஜ் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Recommended Video

Bigg Boss Ultimate Tamil Promo Released | Vanitha,Bharani Confirm
ரிலீஸ் தேதி வெளியானது

ரிலீஸ் தேதி வெளியானது

மேலும் மீனா, கல்யாணி பிரியதர்ஷன்,உன்னி முகுந்தன், கனிகா, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ப்ரோ டாடி அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் வருவதையொட்டி ப்ரோ டாடி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X