Malaikottai vaaliban OTT: மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி அப்டேட்.. எங்கே எதில் தெரியுமா?

சென்னை: இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் மலைக்கோட்டை வாலிபன். காவியத் திரைப்படமான இத்திரைப்படம் ஜனவரி 25ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டு, சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். வரலாற்றுப் படமான இதில் மோகன்லால், மலைக்கோட்டை வாலிபனாக நடித்துள்ளார். ரங்கப்பட்டினம் ரங்கராணி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார். மேலும், ஹரீஷ் பெராடி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆர். ஆச்சாரி மற்றும் மனோஜ் மோசஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Mohanlal’s Malaikottai Vaaliban OTT release date

மலைக்கோட்டை வாலிபன்: இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மிக நுட்பமாக நம்மை ஒரு பழமையான கதையில் இருப்பதை காட்சிக்கு காட்சி உணரவைக்கிறார். அவர் கதாபாத்திரங்களை விட அவர்களைச் சுற்றி இருக்கும் பொருட்களின் பிரம்மாண்டத்தை முதன்மைப்படுத்துகிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். இப்படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது எனலாம்.

காவியத் திரைப்படம்: மலைக்கோட்டை வாலிபன் என்ற காவியத் திரைப்படத்தில், வலிமை மற்றும் திறமை மிக்க போர்வீரனாக மோகன்லால் நடித்துள்ளார். ரங்கப்பட்டினம் ரங்கராணி என்ற பிரபலமான நடனக் கலைஞரைக் கண்டதும் வாலிபனின் வாழ்க்கையில் ஓர் திருப்பம் ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் விளைவுகளையும், சவால்களையும் போர் வீரனான மோகன்லால் எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. மேலும், இந்த படத்தில், ஜப்பானின் சாமுராய் கலாச்சாரம் இந்தியாவில் எப்படி வேரூன்றியுள்ளது என்பதை இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி இருந்தார்.

ஓடிடி ரிலீஸ் தேதி: குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ந் தேதி இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மோகன்லாலின் அட்டகாசமான நடிப்பில் பட்டையை கிளப்பிய இத்திரைப்படம் பிப்ரவரி 23ந் தேதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளம் வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X