ஓடிடியில் வெளியாகும் மோகன்லாலின் மரக்கார்... உறுதிப்படுத்திய தயாரிப்பாளர்!

திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார்.

இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதா தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மரக்கார் படம்

மரக்கார் படம்

நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், பிரபு, சுனில் ஷெட்டி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார் -அரபிக்கடலிண்ட சிம்ஹா. வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று நீண்ட நாட்களாக ரிலீசுக்காக இந்தப் படம் காத்திருக்கிறது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. மிகுந்த பொருட்செலவில் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. மோகன்லால் உள்ளிட்டவர்கள் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

16வது நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. முன்னதாக மார்ச் மாதத்திலேயே இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரிலீஸ் தாமதம் ஆனது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளதாக தயாரிப்பு தரப்பு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால் ரிலீஸ் தள்ளிப் போனது.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

இந்நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டவுடன் முறையான அறிவிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

இந்தப் படத்தின் சூட்டிங் உள்ளிட்டவை நிறைவு பெற்று கடந்த 2020 மார்ச் மாதத்திலேயே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது. சிறப்பான வகையில் படம் உருவான போதிலும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதால் தற்போது ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக பட்ஜெட் படம்

அதிக பட்ஜெட் படம்

கேரளாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் மரக்கார். இந்தப் படத்தின் ரிலீஸ் இரண்டு ஆண்டுகளாக தள்ளிப் போயுள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவது அவர்களுக்கு உற்சாகத்தை கண்டிப்பாக அளிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X