ஓடிடியில் ரிலீசாகும் மரக்கார் படம்... உறுதிப்படுத்திய படக்குழு!

திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால், மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார்.

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப்படம் மரக்கார். மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.

மரக்கார் படத்தின் ட்ரெயிலர்

மரக்கார் படத்தின் ட்ரெயிலர்

படத்தில் மோகன்லாலுடன், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை மிரட்டலான வகையில் அமைந்திருந்தன. மலையாள திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

16வது நூற்றாண்டின் வரலாற்று சம்பவங்களை தொகுத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் பின்பு ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட்டில் என இதன் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூர் தெரிவித்திருந்தார்.

ஓடிடியில் நேரடி ரிலீஸ்

ஓடிடியில் நேரடி ரிலீஸ்

இந்நிலையில் தற்போது படம் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக தற்போது படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் ரிலீஸ் குறித்து அறிவிப்பு

விரைவில் ரிலீஸ் குறித்து அறிவிப்பு

விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக ரசிகர்களனின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் கூடிய விரைவில் ஆகவுள்ளது தற்போது ரசிகர்களை சந்தோஷத்திற் உள்ளாக்கியுள்ளது.

வரலாற்றுப் படம்

வரலாற்றுப் படம்

வரலாற்று படங்களை எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. இதற்கு அதிகமான பொருட்செலவு மற்றும் மெனக்கெடல்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் மரக்கார் படக்குழு இதை சாத்தியப்படுத்தியுள்ளது. ஆயினும் இத்தகைய சிறப்பான படத்தை கையில் வைத்துக் கொண்டு 2 வருடங்கள் காத்திருந்த படக்குழு தற்போது ரிலீசை நோக்கி முன்னோக்கி சென்றுள்ளது சிறப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X