ஓடிடில ஹரா செம ட்ரெண்டிங்ல இருக்கே.. வெள்ளி விழா நாயகன் மோகன் பயங்கர ஹேப்பியாம்
சென்னை: மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக விஜய்யுடன் அவர் நடித்திருகும் GOAT படம் வெளியாகவிருக்கிறது. இதில் அவருக்கு முக்கியமான ரோல் என்று கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க ஓடிடியில் ரிலீஸான ஹரா படம் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் டாப் 5 இடத்துக்குள் இருக்கிறது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் கோலோச்சியிருந்த காலம் அது. அப்போது பாலுமகேந்திரா கோகிலா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் மோகன் முதன்முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதில் கமல் ஹாசன், ஷோபா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி மோகனுக்கும் நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு மலையாளத்தில் அறிமுகமான அவர்; பின்னர் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் இண்ட்ரோ ஆனார்.

பிஸி நடிகர்: மூடுபனி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மோகனுக்கும் சிறந்த அடையாளத்தை தந்தது. இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ஹீரோவானார் மோகன். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, லாட்டரி டிக்கெட், கோபுரங்கள் சாய்வதில்லை என்று வரிசையாக படங்களில் நடித்தார். இதனால் அவர் பிஸியான நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார்.
முன்னணியில் மோகன்: தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஒன்று சூப்பர் ஹிட்டாகின அல்லது சுமார் ஹிட்டாகின. பிறகு லெஜெண்ட் இயக்குநர்களின் பார்வை மோகன் மீது திரும்பியது. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் ரெட்டை வால் குருவி, மணிரத்னம் இயக்கத்தில் மௌன ராகம், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள், ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மெல்ல திறந்தது கதவு என்று அவர் நடித்ததெல்லாம் ஹிட்டாகின. குறிப்பாக நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
சினிமாவிலிருந்து விலகல்: இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு; ஆள் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய் நடிக்கும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர்; ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
கலவையான விமர்சனம்: கடந்த மாதம் வெளியான ஹரா படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். குறிப்பாக பெண்களுக்கு வரும் மாதவிடாய் விஷயத்தை வைத்து படத்தில் இடம்பெற்றிருந்த காட்சி சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோலுக்கு உள்ளானது. மேலும், இப்போதைய தலைமுறையில் இப்படி ஒரு காட்சியா என்று ஓபனாக ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
ஓடிடியில் ரிலீஸ்: இப்படி பல விமர்சனங்களை சந்தித்த ஹரா சில நாட்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மோகன் 80களில் ஃபேமஸாக இருந்தவர் என்பதால் திரையரங்குகளில் சென்று ஹரா படத்தை பார்க்க முடியாத பலர் ஓடிடியில் பார்த்தனர். திரையரங்குகளில் கிடைத்த ரெஸ்பான்ஸ்தான் ஓடிடியிலும் கிடைத்தாலும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் 5ஆவது இடத்தில் இருக்கிறது ஹரா. அது படக்குழுவையும், மோகனையும் செம மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











