‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வாங்க முன் வராத ஓடிடி நிறுவனங்கள்.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: மலையாளத்தில் வெளியாகி சச்கைப்போடு போட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இதுவரை எந்த ஒரு ஓடிடி தளமும் வாங்க முன்வரவில்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக மஞ்சும்மல் பாய்ஸ் இருந்த போதிலும், இப்படத்தை ஓடிடி தளங்கள் வாங்க முன்வராதது, அப்படத்தின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
மலையாள சினிமாவில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் இத்திரைப்படம் பெற்று வருகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ்: கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் என்ற கிராமத்தில இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது நண்பர்களில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கதை.
உண்மைக்கதை: 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தொடங்கும் போதே குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம்பெற்று இருந்ததால், இந்த படம் தமிழ் ஆடியன்சுக்கு பிடித்தமான படமாகிவிட்டது. படம் மலையாளத்தில் இருந்தாலும் படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
யாரும் சீண்டவில்லை: இப்படி பலரின் பாராட்டை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இதுவரை எந்த ஒரு ஓடிடி தளமும் வாங்கவில்லை என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே, ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரத்தை முடித்துவிடும் நிலையில், தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் மலையாள படத்தை ஏன் வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயங்குகின்றன என்கிற கேள்வி எழுந்துள்ளது.
150 கோடி வசூல்: மஞ்சும்மல் பாய்ஸ் 150 கோடி வசூல் செய்துள்ள படம் என்பதால் 20 கோடிக்கு மேல் ஓடிடியில் வியாபாரம் பார்க்க படக்குழுவினர் ஆசைப்படுகின்றனர். அதன் காரணமாகவே இந்த படத்தை யாரும் சீண்டவில்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், பிரேமலு மற்றும் பிரமயுகம் படங்கள் சரியான விலையில் விற்பனையாகி உள்ளதாக மாலிவுட் சினிமா ஆய்வாளர் பிள்ளை தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











