நைரோபிக்காக.. வெளியானது மணி ஹெய்ஸ்ட் சீசன் 5.. உலகளவில் டிரெண்டாகும் #MoneyHeistSeason5
சென்னை: வெப் சீரிஸ்கள் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்ப மிகப்பெரிய காரணமான மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரின் 5வது பாகம் சற்று முன் வெளியானது.
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்த வெப் தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று மதியம் 12:30 மணிக்கு மணி ஹெய்ஸ்ட் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது.

உலகளவில் டிரெண்டிங்
மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் இன்று வெளியாக உள்ள நிலையில், காலையில் இருந்தே #MoneyHeistSeason5 ஹாஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த வெப் தொடர் டப் செய்யப்பட்டு ரிலீசாகி உள்ளது.

விக்ரம் பிரபு ட்வீட்
மணி ஹெய்ஸ்ட் வெப் தொடருக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் ரசிகர்களாக உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றே மணி ஹெய்ஸ்ட் வெப் தொடர் நாளை வெளியாகப் போகிறது என பெரும் ஆவலோடு போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.

நைரோபி இல்லை
மணி ஹெய்ஸ்ட் சீசன் 5ல் பிரபல கதாபாத்திரங்களான நைரோபி, பெர்லின், ஓஸ்லோ மற்றும் மாஸ்கோ உள்ளிட்டோர் இல்லை என ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நைரோபி கடந்த சீசனில் உயிரிழந்த நிலையில், நைரோபிக்காக என ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீசனை பார்த்து வருகின்றனர்.

நெட்பிளிக்ஸ் ஐடி
அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் போல நெட்பிளிக்ஸ் குறைவான சந்தாவில் இல்லாமல் அதிக செலவு ஆவதால் பலரும் நெட்பிளிக்ஸ் ஐடியை மற்ற நண்பர்களிடம் இரவல் கேட்டு இந்த வெப் தொடரை பார்த்து வருவதாகவும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

ஆர்த்துரோ சாகணும்
மணி ஹெய்ஸ்ட் சீசன் 5ல் ஆர்த்துரோ கதாபாத்திரம் சாக வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். இந்த கதாபாத்திரத்தின் மீது தான் ஒட்டுமொத்த மணி ஹெய்ஸ்ட் ரசிகர்களின் வெறுப்பும் ஒன்று கூடி திரண்டு நிற்கிறது.


Click it and Unblock the Notifications











