This week OTT release: இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. அட மகாராஜா படமும் வெளியாகுதா!

சென்னை: திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருவதைபோலவே, வாரம்தோறும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. குறைவான கட்டணங்களில் அனைத்து படங்களையும் பார்க்கும் வசதியுடன் இந்த ஓடிடி தளங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

ஒரே நேரத்தில் பல படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகும் சூழலில் எந்த படத்தை பார்ப்பது எந்த படத்தை விடுவது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு காணப்படுகிறது. இதற்கு தீர்வாக ஓடிடி தளங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.

Vijay sethupathi Maharaja movie OTT movies tamil cinema

ஓடிடி தளங்கள்: வாரந்தோறும் ஓடிடியில் மிகச் சிறப்பான படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன/ திரையரங்குகளில் ரிலீசாகும் படங்களுக்கு இணையான வரவேற்பை இந்த படங்களும் பெற்று வருகின்றன. பல்வேறு காரணங்களால் திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்க்க முடியாத ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த ஓடிடி தளங்கள் காணப்படுகின்றன. சில வார இடைவெளியிலேயே முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளியாகி விடுவதால் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து இந்த படங்களை காணும் வசதி ரசிகர்களுக்கு உள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்: குறைவான கட்டணங்களில் இந்த படங்களை பார்த்து விடுவதும் ஓடிடி தளங்களின் மிகச் சிறப்பான விஷயமாக காணப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரமும் முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடி தளங்கள் வெளியிடவுள்ளன. இதில் முக்கியமான படமாக விஜய் சேதுபதியின் மகாராஜா படம் நாளைய தினம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. இதேபோல 8 தோட்டாக்கள் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர் வெற்றி நடிப்பில் பகலறியான் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளைய தினம் வெளியாகவுள்ளது.

தெலுங்கு, மலையாள படங்கள்: இதேபோல ஆஹா தமிழ் தளத்தில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத்குமார், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படமும் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஜிலேபி, ஹரேம் ஹரா, மற்றும் ஆரம்பம் படங்கள் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளைய தினம் வெளியாகவுள்ளன. பிளாட் படம் ஈடிவி வின் தளத்திலும் அக்னிசக்தி ஹாட்ஸ்டார் சீரிசிலும் வெளியாகவுள்ளது. இதேபோல மலையாளத்தில் மந்தாகினி படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தியில் காகுடா ஜீ5 தளத்திலும் பில் ஜியோ சினிமாவிலும் வெளியாகவுள்ளது.

ஹாலிவுட் படங்கள்: இதனிடையே ஹாலிவுட்டில் ஃபாஸ்ட் சார்லி படம் பிஎம்எஸ் தளத்திலும் மீன் கேர்ள்ஸ் பிரைமிலும் தி லாங் கேம் படம் நெட்பிளிக்சிலும் வெளியாகவுள்ளன. இதனிடையே நெட்பிளிக்சில் பிளேம் தி கேம் என்ற ஜெர்மனி படமும் தி சாம்பியன் என்ற ஸ்பானிஷ் படமும் வானிஷ்ட் இன் டு தி நைட் என்ற இத்தாலிய படமும் வெளியாகவுள்ளன. இந்த படங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறப்பான பல படங்கள் இந்தவாரமும் ஓடிடியில் வெளியாவதால், இந்த வாரயிறுதியில் ரசிகர்கள் ஓடிடி தளங்களில் அதிக நேரங்களை செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X