விளையாடிய 7.44 லட்சம் கோடிகள்.. WB சகாப்தத்தை முடித்து வைத்த நெட்ஃபிளிக்ஸ்.. 5 முக்கியமான சமாச்சாரம்
சென்னை: ஒட்டுமொத்த திரையுலகங்களும் தற்போது விவாதித்துக் கொண்டு இருக்கும் விஷயம் என்றால் அது வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூபாய் 7.44 லட்சம் கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் எழுதி வாங்கியதுதான். கடந்த 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி, நான்கு சகோதரர்களான ஹாரி , ஆல்பர்ட் , சாம் மற்றும் ஜாக் வார்னர் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 102 ஆண்டுகளுக்குப் பின்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் உள்ள 5 முக்கியமான சாரம்சங்களைக் காணலாம்.
ஓடிடி தான் எதிர்காலம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இப்படியான சம்பவம் நடைபெற்றுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வார்னர் பிரதர்ஸை வாங்குவதற்காக பலரும் போட்டி போட்டார்கள், ஆனால் நெட்ஃபிளிக்ஸ் அதில் கொஞ்சம் முந்திக் கொண்டுள்ளது. ஏற்கனவே 300 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், தற்போது வார்னர் பிரதர்ஸையும் வாங்கி விட்டதால் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை என்பது கணிசமாக உயரும். மேலும் இது உலகத்தில் வேறு எந்த ஓடிடி நிறுவனமும் நெருங்க முடியாத அளவுக்கு சந்தாதாரர்களை கொண்ட ஓடிடி நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ் மாறும்.

எல்லாமே நெட்ஃபிளிக்ஸ்க்கு சாதகமாக முடிந்துவிட்டாலும், மொத்தமாக வார்னர் பிரதர்ஸை நெட்ஃபிளிக்ஸ் வசம் ஒப்படைக்க மொத்தம் 18 மாதங்கள் அதாவது ஒன்றரை ஆண்டு கால அவகாசம் உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்குள் நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் இருந்து, சில முக்கிய முடிவுகளை எடுக்க யோசித்து வருகிறார்களாம். அதாவது வார்னர் பிரதர்ஸை நெட்ஃபிளிக்ஸ் உடன் இணைப்பதா? இல்லை தனித்தே செயல்பட விடுவதா என்பதுதான் அந்த ஆலோசனையாம். இதில் எது நடந்தாலும் தற்போது உரிமையாளர் மாறியுள்ளதால் சந்தா தொகை அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ் கேமரூன் ரியாக்ஷன்: இந்த ஒப்பந்தம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வார்னர் பிரதர்ஸ் படத்தை திரையரங்குளில் ரிலீஸ் செய்து ஸ்ட்ரீம் செய்பவர்கள், ஆனால் நெட்ஃபிளிக்ஸ் அப்படியான நிலைப்பாட்டை கடந்த காலத்தில் கூட எடுத்ததில்லை. அப்படி இருக்கும் போது, எதிர்காலத்தில் நெட்ஃபிளிக்ஸ் படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யுமா என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இந்த ஒப்பந்தத்தை ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என்று விமர்சித்துள்ளார்.

மாற்றம்: இந்த ஒப்பந்தம் முழுவதுமாக முடிய வேண்டும் என்றால், நெட்ஃபிளிக்ஸ்க்கு விற்கப்படாத வார்னர் பிரதர்ஸின் மற்ற கிளை நிறுவனங்களான சி.என்.என், டிஸ்கவரி, டிஸ்கவரி மற்றும் யூரோஸ்போர்ட் போன்ற மற்றவற்றையும் விற்பனை செய்ய வேண்டும். இதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், நெட்ஃபிளிக்ஸ் உடனான விற்பனை ஒப்பந்தத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப்: இதில் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கவனம் இந்த ஒப்பந்தங்கள் மீது இருப்பது தான். அதற்கு முக்கியமான காரணம், டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு நன்கொடை வழங்கும், பாரமவுண்ட் ஸ்கைடான்ஸின் உரிமையாளர்களான லாரி எலிசன் மற்றும் அவரது மகன் டேவிட் ஆகியோர் வார்னர் பிரதர்ஸை வாங்க முனைப்பு காட்டியுள்ளதால், இந்த விவகாரத்தில் டிரம்ப்பின் தலையீடு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











