OTT -யை அசர வைத்த ஜோதிகா.. அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 படங்கள்!
சென்னை: ஒவ்வொரு வாரமும் புது புது திரைப்படங்கள் வெளியாவதை போன்று ஓடிடியிலும் வெளியாகும் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். திரையில் வந்து வெற்றி பெறுவதை காட்டிலும் ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்களை ஈர்த்த படங்களின் வரிசையில் கடந்தாண்டு மஹாராஜா முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோட் படத்திற்கு கூட அவ்வளவு பார்வையாளர்கள் இல்லை. கொரோனாவுக்கு பின்பு OTT தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. அண்மையில் OTT தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்டது எது என்பது குறித்து இதில் காணலாம்.

அதிக பார்வையாளர்கள்: இந்த லிஸ்டில் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இடம்பிடித்துள்ளன. வெப் தொடரை பொறுத்தவரை குறைந்தது ஒரு எபிசோடை முழுமையாக பார்த்திருக்க வேண்டும். அதேபோல் படம் என்றால் அரை மணி நேரத்திற்கு மேல் இருக்க வேண்டும். இதை வைத்து தான் படம் பார்த்தவர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தியா முழுவதும் எடுத்த இந்த சர்வேயில் ஹிந்தி வெப் தொடர்களும், படங்களும் தான் அதிகமாக இடம்பிடித்துள்ளன.
ஆஷ்ரம் சீசன் 3: இதில், ஏக் பத்னாம் ஆஷ்ரம் சீசன் 3 என்ற இந்தி வெப் தொடர் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. அமேசான் எம்எக்ஸ் பிளேயரில் வெளியான இந்த தொடரை ஒரு வாரத்தில் சுமார் 9.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் பார்த்துள்ளனர். அதை தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் வெப் தொடரான ஊப்ஸ் அப் க்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதை 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 3வது இடத்தில் சோனி லிவ்வின் ரியாலிட்டி ஷோவான ஷார்க் டேங்க் இந்தியா சீசன் 4 உள்ளது. இது 38 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. அதேபோன்று ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான Dabba Cartel என்ற வெப் சீரிஸும் இடம் பெற்றுள்ளது. இந்த வெப் தொடரை 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

4வது இடத்தில் நெட்பிளிக்ஸில் வெளிவந்த தூம் தாம் என்கிற படம் உள்ளது. இப்படத்தை ஒரே வாரத்தில் 33 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 5வது இடத்தில் 31 லட்சம் வியூஸ் உடன் ஹாட்ஸ்டாரின் பவர் ஆஃப் பஞ்ச் என்கிற படம் உள்ளது.
10ஆவது இடம்: 7வது இடத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த கௌஷல்ஜீஸ் வெர்சஸ் கௌஷல் என்கிற படம் உள்ளது. இதற்கு 25 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. 8வது இடத்தில் உள்ள அமேசான் எம்எக்ஸ் பிளேயரோட வெப் சீரிஸ் ஸ்கூல் பிரண்ட்ஸ் சீசன் 3 22 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. 9வது இடத்தில் ஹாட்ஸ்டார் படமான தில் தோஸ்தி ஓர் டாக்ஸ் 21 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. ஜீ 5 வெப் தொடரான க்ரைம் பீட் ஒரு வாரத்தில் 2 மில்லியன் பார்வைகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது. அதிகம் ஓடிடியில் படம் பார்ப்பவராக இருப்பவர்களுக்கு இந்த வாரம் புதிய வரவில் குடும்பஸ்தன், ரன்னிங் பாய்ண்ட், எப் மேரி கில், தண்டேல் போன்ற படங்களை கண்டு ரசிக்கலாம். மக்களை குதூகலிக்கும் புதுவித தொடர்களை பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











