ஓடிடி தளத்தில் இன்று வெளியான படங்கள்...முழு விவரம்
சென்னை: ஓடிடி தளத்தில் இன்று ஏப்-1 முக்கிய படங்கள் வெளியாகியுள்ளன. மலையாளம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன. இத்தளத்தில் 2 பயோபிக் படம் ஒரு வெப்சீரிஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. ரசிக்கத்தவறாதீர்கள்.

Kaun Pravin Tambe? கௌன் பிரவீன் தாம்பே பயோபிக் மூவி
ஓடிடி தளத்தில் அனைவரும் பார்க்கவேண்டிய முக்கியமான படம் கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் கௌன் பிரவீன் தாம்பே (kaun praveen thambe). மகாராஷ்டிராவில் பிறந்த தாம்பே இதுவரை இண்டர்நேஷனல் போட்டியில் விளையாடியதே இல்லை. முதல்தர கிரிக்கெட்டில் போட்டியான ரஞ்சிப் போட்டி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல்-ல் தேர்வு செய்யப்பட்டபோது அவருடைய வயது 41. அவருடைய வாழ்க்கை வரலாறு அவருடைய போராட்ட காலம் உள்ளிட்டவற்றை சொல்வதே இந்த படம்.இது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

மூன் நைட் (Moon Knight) வெப் சீரிஸ்
ஓடிட்டு இத்தளத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெப் சீரிஸாக வெளியாகியுள்ளது மூன் நைட் (Moon Knight). ஆறு தொடர்களைக் கொண்ட வெப்சீரீஸ் ஆக உருவாகி உள்ளது. மார்வெல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் சாதாரண நபர் சூப்பர் ஹீரோவாக மாறும் கதையமைப்பைக் கொண்டது. இதில் முதல் பாகம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த ‘பீஷ்ம பர்வம்'(Bheeshma Parvam)
அடுத்து இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள முக்கியமான படம் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த 'பீஷ்ம பர்வம்'(Bheeshma Parvam). இந்த படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இதில் மம்முட்டி முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார் படத்தின் காட்சிகளை வைத்து பார்க்கும்போது கேங்க்ஸ்டராக மம்முட்டி நடிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டியுடன் நதியாவும் இணைந்து நடித்துள்ளார். இந்தப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' (Radhe Shyam)
ஓடிடி தளத்தில் அடுத்து வெளியாகியுள்ள படம் 'ராதே ஷ்யாம்' (Radhe Shyam)இந்த படம் பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்த ஒரு காதல் படம் ஏற்கனவே திரையரங்கில் வெளியான இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடித்த காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தியேட்டரில் வெளியானதால் கதை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு.

டயனாவின் பயோபிக் மூவி ‘ஸ்பென்சர்'(Spencer)
அடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ஒரு பயோபிக் பிக்சர் பெயர் 'ஸ்பென்சர்'(Spencer). இங்கிலாந்து இளவரசி பல சர்ச்சைகளுக்கிடையே வாழ்ந்து கார் விபத்தில் மறைந்தும் உலக மக்கள் மனதை கொள்ளைக்கொண்டு வாழும் டயானாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஓடிடி தளத்தில் அமேசன் பிரைம்-ல் வெளியாகி உள்ளது.

உண்மைச் சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட மலையாள படம் படா(PADA)
அடுத்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அமேசான் ப்ரைம்-ல் வெளியாகி உள்ள மலையாள படம் படா(PADA) இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஜெய்ஹிந்த் படம் போல் ஆதிவாசிகளின் கதையை கொண்டு எடுக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு ஆதிவாசிகள் சட்டத்தை எதிர்த்து போராடிய நான்கு இளைஞர்களை கொண்டு எடுக்கப்பட்ட படம். ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

துல்கர் சல்மானின் தமிழ் படம் ஹே சினாமிகா (Hey Sinamika)
அடுத்து வெளியாகியுள்ள படம் ஹே சினாமிகா (Hey Sinamika)ஏற்கனவே தியேட்டர்களில் வெளியாகி உள்ள இந்த படம், இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் நடித்த காதல் படம். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தமிழ் படம் தற்பொழுது ஓடிடி நெட் ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

மெம்பர் ரமேஷன் 96 ஆம் வார்டு (Member Rameshan 9aam Ward)
ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மற்றொரு மலையாள படம் மெம்பர் ரமேஷன் 96 ஆம் வார்டு (Member Rameshan 9aam Ward) இந்தப் படம் கேரளா அரசியலை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இளைஞன் தற்செயலாக அரசியலுக்கு வந்து பெரிய ஆளாக மாறுவதே படத்தின் மூலக்கதை. அர்ஜுன் அசோகன் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் ஓடிடி தளத்தில் ஜீ 5-ல் (ZEE 5) இந்த படம் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











