சன்னி லியோன் ஷோவில் இத்தனை அழகான ஆண் போட்டியாளர்களா?.. எல்லாமே சிக்ஸ் பேக் வைத்து மிரட்டுறாங்களே!

மும்பை: MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சி தற்போது ஓடிடி மற்றும் சேனலில் ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகிறது. ஜியோ சினிமா ஓடிடி சேனலில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்த டேட்டிங் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகிறது. ரசிகர்களின் கனவுக்கன்னி சன்னி லியோன் மற்றும் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட வெள்ளை மாதவன் போல இருக்கும் தனுஜ் விர்வானி இணைந்து இந்த போட்டியை நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் 21 இளம் போட்டியாளர்கள் தங்கள் காதலை கண்டுபிடிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இளமை துள்ளலுடன் கலக்கலாக நடைபெற்று வருகிறது. MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் MTVயிலும், JioCinemaவிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

இந்தியாவின் பரபரப்புக்கு பஞ்சமில்லாத டேட்டிங் ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியின் 5வது சீசன் ஆரம்பித்து அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது. MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆண் போட்டியாளர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

அமெஹா குருங்: 24 வயதான அமேஹா குருங் (Ameha Gurung) சன்னி லியோன் தொகுத்து வழங்கி வரும் ஸ்பிளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பார்ட் டைம் ஸ்டைலிஸ்ட்டாக பணியாற்றி வந்தவர் உடலில் ஏகப்பட்ட டாட்டூக்களை குத்திக்கொண்டு தனது நடன அசைவுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

சிவெத் தொமர்: டேராடூனை சேர்ந்த சிவெத் தொமர் (Siwet Tomar) சிக்ஸ்பேக் பாடியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.MTV Roadies - Karm ya Kaand நிகழ்ச்சிகள் ரன்னர் அப் ஆன இவர் எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 நிகழ்ச்சியில் ஏகப்பட்ட இளம்பெண்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

அனிகட் லமா: சில்குரியை சேர்ந்த ஆத்லெட்டான அனிகட் லமா (Aniket Lama) இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இன்புளுயன்ஸர், ஸ்போர்ட்ஸ் கோச்சான இவர் நார்த் யுனைடெட் கால்பந்தாட்ட குழுவின் விளையாட்டு வீரராகவும் திகழ்கிறார். ஸ்வீட்டான இன்னோசன்ட் பெண்ணை தான் இவருக்கு பிடிக்குமாம்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

யுவராஜ் பஸி: ஜஸ்டின் பீபரின் தீவிரமான ரசிகரான யுவராஜ் பஸி (Yuvaraj Bassi) தனது உடலில் மிகப்பெரிய ஜஸ்டின் பீபர் டாட்டூவை வரைந்துள்ளார். ஜாலியான பேர்வழியான இவர் தனக்கு முற்றிலும் ஆப்போசிட்டான பெண் தான் காதலியாக வரவேண்டும் என எதிர்பார்க்கக் கூடியவர். குறிப்பாக உடலில் எந்த ஒரு டாட்டூவும் போட்டிருக்கக் கூடாதாம்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

ஜஸ்வந்த் போப்பண்ணா: கன்னட மொழியில் வெளியான பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் பிரபலமானவர் ஜஸ்வந்த் போப்பண்ணா (Jashwanth Bopanna ). MTV Roadies South Africa நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பெண்களை எளிதாக கவர்ந்து விடும் திறமை கொண்டவர்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

அபிஷேக் ஜெயின்: ஏடி என்கிற அபிஷேக் ஜெயின் (Addy aka Abhishek Jain) பெண்களை காயப்படுத்தி விடக்கூடாது என்கிற சிந்தனையுடன் இருக்கக்கூடியவர். க்யூட்டான தனது வைபுக்கு ஏற்ற பெண்ணை இந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்போவதாக கூறியுள்ளார்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

தேவ் கரன் ஷர்மா: 22 வயது இளம் பாடலாசிரியர் மற்றும் பேஸ்கட் பால் பிளேயரான தேவ் கரன் ஷர்மா (Dev Karan Sharma) தனது பெற்றோர்களின் காதல் வாழ்க்கையை கேட்டு இன்ஸ்பயர் ஆகி தானும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறாராம்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

ஹர்ஷ் அரோரா: அனிமல் படத்தில் வரும் ரன்பீர் கபூர் போல இவரும் ஆல்ஃபா மேல் குணம் கொண்டவராம். எப்போதுமே எல்லாவற்றிலும் ஆளுமை செலுத்தக்கூடிய இவர் தனக்கு டஃப் கொடுக்கக்கூடிய பெண்ணை காதலிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

அர்பாஸ் பட்டேல்: 6.4 அடி உயரம் கொண்ட 24 வயது இளைஞரான இவருக்கு சோசியல் மீடியாவில் 1.7 மில்லியன் ஃபாலோயர்கள் ரசிகர்களாக உள்ளனர். சிக்ஸ் பேக் உடும்பு உடன் செம ஃபிட்டாக இருக்கும் இவரை ஜெண்டில் ஜெயிண்ட் என்றே பலரும் அழைத்து வருகின்றனர்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

ஆதித் மினோச்சா: கேமிங் வீடியோக்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து சோசியல் மீடியாவில் பிரபலமானவர் தான் ஆதித் மினோச்சா. முழுநேர யூடியூப் ஆன இவர் இந்தியாவின் பிரபலமான டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பெருமையாகக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

MTV Splitsvilla X5 ExSqueeze Me Please most handsome male contestants list is here

ஆயுஷ்மான் மகு: வாய்ப்பு பூரி சேர்ந்த மாடலான ஆயுஷ்மான் மகு ஒருபோதும் தன்னால் எதுவும் முடியாது என்று சொல்லவே மாட்டார். யுவர் சாதாரண சாக்லேட் பாய் கிடையாது ரக்கடு பாய் என்பதை போட்டியாளர்கள் மத்தியில் அடிக்கடி காட்டி வருகிறார். அழகான பெண்ணாக இருந்தால் மட்டுமே இவருக்கு போதும் எனக் கூறியுள்ளார்.

இத்தனை போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பித்து நடைபெற்று MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எம் டிவி மற்றும் ஜியோ சினிமாவில் பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X