OTT: ஜியோ சினிமா நம்பர் ஒன் ஓடிடியா மாறப்போகுதா?.. அடேங்கப்பா முகேஷ் அம்பானி போடும் மாஸ்டர் பிளான்!
மும்பை: உதயம் தியேட்டர் முதல் பல திரையரங்குகள் சினிமாவை பார்க்க ரசிகர்கள் வராத காரணத்திற்காக கரண்ட் பில்லுக்கு கூட வழியில்லாமல் அந்த இடங்களை அடுக்குமாடி கட்டடங்களாக கட்டவோ அல்லது மால் கட்டி பல கடைகளுக்கு வாடகை விடவோ முடிவு செய்து விட்டனர். இது எல்லாத்துக்கும் காரணம் வீட்டிலேயே ஓடிடி மூலம் மக்கள் படங்களை பார்ப்பது அதிகரித்து இருப்பது தான் என்கின்றனர்.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை வீட்டிலேயே சொகுசாக ஒரே ஒரு மாதம் அல்லது வருட சந்தா கட்டி விட்டு எத்தனை படங்கள், வெப்சீரிஸ்கள் வேண்டுமானால் பார்க்க பல கன்டென்ட்டுகளையும் பலான கன்டென்ட்டுகளையும் கொடுத்து வருகின்றன. டிவியை தாண்டி பல ஓடிடி சேனல்களை மொபைலிலேயே இளைஞர்கள் பார்த்து வருகின்றனர்.

நெட்வொர்க்கில் முதலிடம்: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக திகழும் முகேஷ் அம்பானி ஜியோ நெட்வொர்க் மூலம் ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நெட்வொர்க்குகளை பின்னுக்குத்தள்ளி விட்டு முதலிடத்தில் உள்ளார். ஓடிடியில் தான் எதிர்காலம் இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்ட அவர், அடுத்து ஓடிடியிலும் டாப்பில் வரவேண்டும் என ஜியோ சினிமாவையும் ஆரம்பித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்டவற்றை ஜியோ சினிமாவில் ஒளிபரப்பி அதிகப்படியான சந்தாதாரர்களை ஈர்த்து வந்த முகேஷ் அம்பானி அடுத்து ஓடிடியை பலப்படுத்த பல வழிகளில் முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார்.
டாடா நிறுவனத்துடன் டீலிங்: வால்ட் டிஸ்னியுடன் கூட்டணி வைத்து இருக்கும் டாடா பிளே நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க தற்போது ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இதன் மூலம் ஜியோ சினிமாவுக்கு மேலும், சந்தாதாரர்கள் அதிரடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் ஓடிடியில் நம்பர் ஒன்: இலவசமாக இணைய டேட்டாவை கொடுத்து ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஜியோ பின்னாடி வரவழைத்த ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் ஓடிடியில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாக கூறுகின்றனர். பாலிவுட்டின் பெரிய பெரிய நடிகர்களின் படங்களை வாங்குவது முதல் ஓடிடியில் சொந்த தயாரிப்பில் சில வெப்சீரிஸ்களை உருவாக்குவது என பக்காவாக ஸ்கெட்ச் போட்டு களமிறங்கி இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











