Must Date the Playboy அடல்ட் ரொமான்ஸ் டிராமா யூடியூபில் வெளியாகியிருக்கு.. அதன் கதை என்ன தெரியுமா?
சென்னை: சோஷியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் தியேட்டர்களிலோ அல்லது ஓடிடியிலோ மட்டுமே படம், பாடல்கள், தொடர்களை வெளியிடலாம் என்ற நிலைமை மாறியிருக்கிறது. யூடியூபில் வெளியிடப்படும் டிராமாக்கள், தனி பாடல்கள் உள்ளிட்டவைகளின் எண்ணிக்கையும் அபரிமிதமாக வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் உருவாகியிருக்கும் ரொமான்ஸ் டிராமா ஒன்றும் யூடியூபில் ரிலீஸாகி வரவேற்பை பெற தொடங்கியிருக்கிறது.
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் மத்தியில் எல்லாம் கலைத்துறையில் நிறைய சுயாதீன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு இங்கிருந்தும் ஆதரவுகள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி வைரமுத்து, தேவா ஆகியோரும், இதுபோன்ற முயற்சிகளுக்கு துணை நின்று பணிபுரிந்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சிங்கப்பூரிலிருந்து தமிழ் யங் அடல்ட் ரொமான்ஸ்-டிராமா தொடர் Must Date the Playboy! (MDTP), 360 Entertainment Productions தயாரிப்பில் உருவாகி தற்போது YouTube-ல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடரின் கதை இதுதான்: டி. சூரியவேலன் இயக்கத்தில், ஹரி ராஜன் இணைந்து எழுதிய இந்த தொடர், இளம் தலைமுறையின் காதல், நட்பு மற்றும் உணர்ச்சி மோதல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் கதை, அமைதியான மற்றும் விதிகளை பின்பற்றும் 'தாரா' என்ற இளம் பெண்ணைச் சுற்றி நகர்கிறது. தனது நெருங்கிய தோழி 'கௌஷி'யை பாதுகாக்கும் நோக்கில், பள்ளியின் கவர்ச்சியான 'பிளேபாய்' செய்னிடம் 'என் காதலனாக இரு' என்ற எதிர்பாராத முன்மொழிவை முன்வைக்கிறாள்.
முக்கிய கதாபாத்திரங்களில் யார்? யார்?: ஒரு போலியான உறவாக தொடங்கும் இந்த பயணம், பின்னர் உண்மையான உணர்வுகளாக மாறும்போது, கதையில் பல திருப்பங்கள் உருவாகின்றன. இந்த தொடரில் சந்த்னி நாகதுர்கா, முஸம்மில் எலியாஸ், மழைமேகன், பிரகதேஷ் பிரகாஷ் மற்றும் கங்கா கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொடரில் பணியாற்றிய டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு - ஜிதேஷ் சி.ஜி., எடிட்டிங் - அருண்குமார், பின்னணி இசை - Shabir Music Asia ஆகியோரின் பங்களிப்புகள் தொடரை மேலும் சிறப்பாக்குகின்றன. காதல், நட்பு மற்றும் உணர்ச்சிகளின் நுணுக்கமான வெளிப்பாட்டுடன், இளம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் Must Date the Playboy! (MDTP) தற்போது YouTube-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.


Click it and Unblock the Notifications