சோனி லைவில் வெளியாகும் பரத் படம் .. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..காரணம் என்னனு தெரியுமா ?
சென்னை :பரத் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் " நடுவன்" இப்படம் சோனி லைவில் வெளியாக போவதாக தற்போது அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
சோனி லைவ் தொடர்ச்சியாக தரமான படங்களை வெளியீடு செய்து, மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. குறுகிய காலகட்டத்தில், வரிசையாக தொடர் வெற்றி திரைப்படங்களின் பிரீமியர் மூலம் மக்களிடம் இந்நிறுவனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சோனி லைவ் வெளியிட்டு வரும் வெற்றித் திரைப்பட வரிசையில் தற்போது இப்படமும் இணைந்துள்ளது. அதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது

ஆரம்பமே அசத்தல்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அறிமுகமான பரத் ,ஐந்தில் ஒருவராக நடித்தாலும் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பும் வெற்றியும் கிடைத்தது.அதன் பிறகு பல படங்களில் நடித்த பரத் வெற்றி நாயகனாக இருந்தார்.விஷாலின் முதல் படமான செல்லமே படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

காதல் படம்
அதன் பிறகு இவரது நடிப்புக்கு தீனி போட்ட படம் தான் காதல்.தனது எதார்த்த நடிப்பால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இதுவரை நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.தற்போது வானிபோஜனுடன் இணைத்து ஒரு படம் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்து உள்ளது.

நடுவன்
தற்போது பரத் நடிப்பில், ஷரங் இயக்கத்தில், க்யூ என்டேர்டைன்மெண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் Lucky Chhajer தயாரித்துள்ள " நடுவன்" திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது . திரைப்படம் வெளியாகும் தேதியுடன் கூடிய, படத்தின் டிரெய்லரை, சோனி லைவ் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.

திரையரங்கில் இல்லை
சமீபத்தில் திரையரங்கில் வெளிவந்த படங்களுக்கு மக்கள் செல்லாததால், நல்ல படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக பாதிக்கப்பட்டது.இதனை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் இப்படத்தை OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளார். ஆச்சர்யங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த இந்த திரில் திரைப்படத்தில் அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் வெளிவர தயாராக உள்ள நிலையில் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நல்ல பாடல்கள்
"நடுவன்" திரைப்படத்தின் முதல் பாடலாக, திறமைமிகுந்த தரண் குமார், அவர்களின் இசையில் வெளியான "காலை" பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஷரங் இப்படத்தினை எழுதி, இயக்கியுள்ளார் . கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா ஶ்ரீ மற்றும் பல நடிகர்கள் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சோனி லைவில் ஏற்கனவே வெளிவந்த வாழ் ,தேன் ,கசடதபற போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த வரிசையில் இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .


Click it and Unblock the Notifications











