50 கோடியும் இல்லை.. ஓடிடியில் கல்யாண கேசட்டும் விற்கல.. நாக சைதன்யா திருமண வதந்தி அம்பலம்!

ஹைதராபாத்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டாக்குமெண்டரி வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் திருமணமாகி 2 ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் 18ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. சுமார் 25 கோடிக்கு நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு மற்றும் திருமண காட்சிகள் அடங்கிய ஆவணப்படம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், நடிகர் தனுஷ் நானும் ரவுடி தான் படத்தின் bts காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்டார் என்றும் நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். அவரது கல்யாண கேசட்டை புரமோட் செய்யத்தான் தனுஷ் பற்றி அவர் அவதூறு பரப்பினார் என ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின.

ott naga chaitanya sobhita dhulipala

தனுஷை எதிர்த்து நயன்தாராவுக்கு ஆதரவாக பார்வதி, ஸ்ருதி ஹாசன், அனுபமா பரமேஎஸ்வரன், நஸ்ரியா உள்ளிட்ட பலர் லைக் பட்டனை தட்ட அந்த விவகாரம் விஸ்வரூபமாக வெடித்தது. இந்நிலையில், நயன்தாராவை போலவே நாக சைதன்யாவும் தனது 2வது திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விற்க முடிவு செய்து விட்டார் என்றும் வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி தான் என நாக சைதன்யாவின் நெருங்கிய வட்டாரங்கள் தற்போது உண்மையை உடைத்துள்ளன.

சமந்தாவுடன் விவாகரத்து: நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவரது முதல் மனைவிக்கு பிறந்த நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். நாக சைதன்யாவை திருமணம் செய்த பின்னரும் நடிகை சமந்தா சினிமாவில் பிசியாக நடித்து வந்தார். இருவருக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. இந்நிலையில், சில பல காரணங்களுக்காக சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து 2021ம் ஆண்டு பிரிந்தனர்.

டிசம்பர் 4 திருமணம்: சமந்தா ஜீவனாம்சம் கூட வேண்டாம் என்று நாக சைதன்யாவை மொத்தமாக பிரிந்து விட்டார். முதன் முதலில் சோஷியல் மீடியாவில் இருந்து அக்கினேனி எனும் குடும்ப பெயரை சமந்தா நீக்கியதில் இருந்து பல பிரபலங்களும் சோஷியல் மீடியா மூலம் விவாகரத்து அறிகுறிகளை தெரிவிக்க தொடங்கினர். சோபிதா துலிபாலாவை காதலித்து வரும் விஷயம் சமந்தாவுக்கு தெரிந்து தான் அவர் நாக சைதன்யாவை பிரிந்தார் என்றும் கூறுகின்றனர். ரகசியமாக காதலித்து வந்த நாக சைதன்யா மற்றும் சோபிதா சில மாதங்களுக்கு முன்னதாக நிச்சயம் செய்த நிலையில், வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

நெட்பிளிக்ஸுக்கு விற்கல: நடிகை நயன்தாராவின் திருமணக் காட்சிகள் அடங்கிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு விற்பனையானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏற்கனவே ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு விற்றிருந்தார். அதே போல நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமண ஆவணப்படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 50 கோடிக்கு வாங்கியதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி தான் என்றும் அதில், கொஞ்சமும் உண்மையில்லை என நாக சைதன்யா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாக சைதன்யா தம்பி நிச்சயதார்த்தம்: நாகார்ஜுனா மற்றும் அமலா அக்கினேனிக்கு பிறந்த அகில் அக்கினேனியின் நிச்சயதார்த்தம் நாக சைதன்யா திருமணத்துக்கு முன்பாக நவம்பர் 26ம் தேதியான நேற்றே நடைபெற்றது. அகில் மற்றும் ஜைனப்பின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகார்ஜுனா ஷேர் செய்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X